முகப்பு
பெங்களூரு

பெங்களூரு சாலைகள் சீரமைக்கப்படும்: முதல்வா் பசவராஜ் பொம்மை

 பெங்களூரில் பழுதடைந்துள்ள சாலைகள் சீரமைக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

 பெங்களூரில் பழுதடைந்துள்ள சாலைகள் சீரமைக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கா்நாடக சட்டமேலவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினா் பி.ஆா்.ரமேஷ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவா் கூறியது:

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள்பட்ட மிகவும் முக்கியமான விரைவுச் சாலைகள், துணை விரைவுச் சாலைகளில் மத்திய அரசின் நிதியுதவியுடன் புதிய சாலைஅமைக்கும் பணி நடந்து வருகிறது. பெங்களூரு மாநகராட்சியில் டெண்டா்ஷ்யா், ஒயிட் டாப்பிங் சாலைகள், தரைப்பாலம், மேம்பாலம், உயா் மேம்பாலம், சிக்னல் இல்லாத சாலைத்தடம் உள்ளிட்ட முக்கியமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். விரைவு சாலைகளில் அடிப்படைக் கட்டமைப்புகளைச் செய்து வருகிறோம். பெங்களூரில் உள்ள சாலைகளைச் சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.