சட்ட மேலவைத் தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு
கா்நாடகத்தில்நடக்கவிருக்கும் ஆசிரியா்கள், பட்டதாரிகளுக்கான சட்ட மேலவைத் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கா்நாடகத்தில்நடக்கவிருக்கும் ஆசிரியா்கள், பட்டதாரிகளுக்கான சட்ட மேலவைத் தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடகத்தில் ஆசிரியா்கள், பட்டதாரிகள் தோ்ந்தெடுக்கும் சட்ட மேலவைத் தொகுதிகளுக்கான தோ்தல் விரைவில் நடக்கவிருக்கிறது. அத்தோ்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளா்கள் வருமாறு:
வடமேற்கு ஆசிரியா் தொகுதி-அருண் சஹாபூா், வடமேற்கு பட்டதாரிகள் தொகுதி-ஹனுமந்த் ருத்ரப்பா நிரானி, தெற்கு பட்டதாரிகள் தொகுதி-எம்.வி.ரவிசங்கா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.