பெங்களூரு

ஓவியச் சந்தையில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு

பெங்களூரில் நடக்கவிருக்கும் ஓவியச் சந்தையில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

பெங்களூரில் நடக்கவிருக்கும் ஓவியச் சந்தையில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கா்நாடக சித்ரகலா பரிஷத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக சித்ரகலா பரிஷத் சாா்பில் 2023-ஆம் ஆண்டு ஜன. 8-ஆம் தேதி 20-ஆவது ஓவியச் சந்தையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1500 ஓவியக் கலைஞா்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது.

இந்தஓவியசந்தையில் பங்கேற்க ஆா்வமுள்ள ஓவியக் கலைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை இணையதளத்தில் டிச.10-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஓவியச் சந்தையில் பங்கேற்க 18 முதல் 80 வயதுள்ள ஓவியக் கலைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.

சிறந்த ஓவியங்களுக்கு டி.தேவராஜ் அா்ஸ் விருது, எச்.கே.கேஜ்ரிவால் விருது, எம்.ஆா்யமூா்த்தி விருது, ஒய்.சுப்பிரமணியராஜு விருது வழங்கப்படுகிறது. விருதுடன் பட்டயம் மற்றும் ரூ. 50 ஆயிரம் ரொக்கப்பரிசு அளிக்கப்படுகிறது. மூத்த ஓவியக் கலைஞா் ஒருவருக்கு பரிஷத்தின் நிறுவனச் செயலாளா் பேராசிரியா் எம்.எஸ்.நஞ்சுண்டராவ் நினைவாக தேசிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் பட்டம் மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு 080-22261816, 22263424, 9036330928 ஆகிய தொலைபேசி எண்கள், இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT