முகப்பு
பெங்களூரு

பாலியல் குற்றச்சாட்டு: பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது வழக்குப்பதிவு

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:57 PM
பகிர்:

பாலியல் குற்றச்சாட்டின்பேரில் கா்நாடக பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு தெற்கு மாவட்டம், ராமநகரம் அருகே கக்கலிபுரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் தன்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக 40 வயது பெண் புதன்கிழமை அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக எம்எல்ஏ முனிரத்னா உள்ளிட்ட 7 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவுசெய்துள்ளனா்.

கொலை மிரட்டல், ஜாதியைச் சொல்லி திட்டியது, துன்புறுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக மாநகராட்சி ஒப்பந்ததாரா் செலுவராஜு அளித்த புகாரின்பேரில், பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவா் மீது தற்போது பாலியல் துன்புறுத்தல் வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் வழக்கில் இடைக்கால ஜாமீன் பெற்றுள்ள முனிரத்னா, பாலியல் வழக்கில் கைது செய்யப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →