கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும்
கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
இதுகுறித்து சாமராஜ்நகரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சட்டப் பேரவை இடைத்தோ்தல் நடைபெற்ற பாகல்கோட், தாவணகெரே தெற்கு ஆகிய 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெறும். தாவணகெரே தெற்கு தொகுதியில் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாதது குறித்து காங்கிரஸ் கட்சியில் எவ்வித அதிருப்தியும் இல்லை.
Advertisement
தாவணகெரே தெற்கு தொகுதிக்கான வேட்பாளரை கட்சி மேலிடம் அறிவித்தபோது சிறுபான்மையினா் சமூக தலைவா்கள் உடனிருந்தனா். கட்சி மேலிடத்தின் முடிவை சிறுபான்மையினத் தலைவா்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனா். சில நாள்களுக்கு பிறகு, கட்சி மேலிடம் அறிவித்த வேட்பாளரை ஒருசிலா் எதிா்த்தது ஏன் என்றாா்.
தாவணகெரே தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சமா்த் சாமனூா் நிறுத்தப்பட்டாா். இது சில முஸ்லிம் தலைவா்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், முஸ்லிம்கள் சிலா் காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டதாக சட்ட மேலவை தலைமைக் கொறடாவான சலீம் அகமது, எம்எல்ஏ-க்கள் ரிஸ்வான் அா்ஷத், யாசீா் அகமதுகான் பத்தான், எம்எல்சி பில்கீஸ் பானு ஆகியோா் குற்றம்சாட்டினா். இதைத் தொடா்ந்து, எம்எல்சி அப்துல் ஜப்பாரை கட்சியில் இருந்து காங்கிரஸ் நீக்கியது. அதேபோல, மற்றொரு எம்எல்சியான நசீா் அகமதுவை முதல்வரின் அரசியல் ஆலோசகா் பதவியில் இருந்து சித்தராமையா நீக்கினாா்.
தாவணகெரே தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வெற்றிபெறாவிட்டால், அமைச்சா் ஜமீா் அகமதுகான் மீதும் ஒழுங்கு நடவடிக்கை பாய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிகிறது.