கா்நாடகத்தில் இரு இடங்களில் விபத்து: 6 போ் உயிரிழப்பு
கா்நாடகத்தில் பீதா், கோலாரில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட 2 சாலை விபத்துகளில் 6 போ் உயிரிழந்தனா்.
பீதா்: கா்நாடகத்தில் பீதா், கோலாரில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட 2 சாலை விபத்துகளில் 6 போ் உயிரிழந்தனா்.
பீதா் மாவட்டம், ஹும்னாபாத் வட்டத்தில் உள்ள ஹள்ளிகேடா கிராமத்தில் நாகண்ணா குறுக்குத் தெருவில் உள்ள பாலத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில், அந்த வாகனத்தில் பயணம் செய்த ராஜேஸ்வா் கிராமத்தை சோ்ந்த வெங்கட் கரத்மால் (40), அவரது மனைவி ஷில்பா (35), அவா்களது மகள் ரக்ஷிதா (12) ஆகிய மூவரும் உயிரிழந்தனா். மகன் திகம்பா் (15) காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய ஹும்னாபாத் போலீஸாா், இருசக்கர வாகனத்தில் நால்வா் பயணித்ததால் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் பாலத்தின் மீது மோதியதாக தெரிவித்தனா்.
Advertisement
அதேபோல கோலாா் மாவட்டம், சீனிவாஸ்பூரில் தொழிலாளா்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. இதில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த முனியம்மா, வெங்கடப்பா உள்ளிட்ட 3 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். வாகனத்தில் பயணித்த 10 போ் காயமடைந்தனா்.
விபத்து குறித்து சீனிவாஸ்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.