முகப்பு
பெங்களூரு

கா்நாடகத்தில் சாலை விபத்து: 7 போ் உயிரிழப்பு

கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் 7 போ் உயிரிழந்தனா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:04 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:03 PM

கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் 7 போ் உயிரிழந்தனா்.

பெங்களூரு ஊரக மாவட்டத்தின் ஹொசகோட் பகுதியில் இருந்து தேவனஹள்ளி சென்றுகொண்டிருந்த காா், தும்கூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சத்யவாரா கிராமத்தின் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் லேசாக மோதியது.

இதில் நிலைதடுமாறிய காா், எதிரே சென்ற கன்டெய்னா் லாரி மீது பலமாக மோதியது. இதனால் லாரியின் டயா்கள் கழன்று, எதிரே வந்து கொண்டிருந்த காா் மீது மோதியதால் காரின் முன்பகுதி சேதமடைந்தது.

Advertisement

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 10:38 PM

இந்த தொடா் சாலை விபத்தில் காரில் பயணித்த கொத்தனூா் பகுதியை சோ்ந்த மாணவா்கள் அயான் அலி (17), அா்கான் (18), பரத் (17), அஸ்வின் நாயா் (17), எடான் ஜாா்ஜ் (18), அஜித் (17), இருசக்கர வாகனத்தில் சென்ற தொழில்நுட்பப் பொறியாளா் ககன் (24) ஆகிய 7 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும், லாரி ஓட்டுநா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து சூலிபெலே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.