சென்னை

சுரங்க விபத்தில் என்எல்சி பொறியாளர் சாவு

நெய்வேலி, ஆக. 8: என்எல்சி முதல் சுரங்கத்தில் புதன்கிழமை நடந்த விபத்தில் பொறியாளர் செந்தில்குமார் (42) அதே இடத்திலேயே இறந்தார்.  ÷நெய்வேலி வட்டம் 7-ல் வசித்து வரும் பொறியாளர் செந்தில்குமார் என்எல்சி மு

தினமணி

நெய்வேலி, ஆக. 8: என்எல்சி முதல் சுரங்கத்தில் புதன்கிழமை நடந்த விபத்தில் பொறியாளர் செந்தில்குமார் (42) அதே இடத்திலேயே இறந்தார்.

 ÷நெய்வேலி வட்டம் 7-ல் வசித்து வரும் பொறியாளர் செந்தில்குமார் என்எல்சி முதல் சுரங்கத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

 ÷இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் இரவுப் பணிக்குச் சென்ற அவர், பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் இயந்திரத்தில் வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, இயந்திரத்திலிருந்து கீழே விழுந்து, பழுப்பு நிலக்கரி குவியலில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

 ÷இது குறித்து தகவலறிந்த சுரங்கத் துறை அதிகாரிகள் காவல்துறைக்கு புகார் செய்ததைத் தொடர்ந்து, நெய்வேலி தெர்மல் போலீஸôர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்துக் குறித்து வழக்குப் பதிவுசெய்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 ÷இறந்த செந்தில்குமாரின் உடலுக்கு, என்எல்சி திட்டம், செயலாக்கம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் ஆர்.கந்தசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”புனித ஆட்சி தருவதற்காக Vijay வந்துள்ளார்!” - கோவையில் Sengottaiyan பேட்டி

Tere Ishk Mein movie review | Dhanush | Kriti Sanon

2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? மோர்னே மோர்க்கல் பதில்!

வாழ்நாள் சாதனையாளர் விருது! இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கௌரவம்!

ஒரு தேர்தல் வெற்றியாவது வெற்றிருக்கிறாரா எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT