பாகிஸ்தானில் போலியோ தடுப்புப் பணிக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலா் . 
சென்னை

பாகிஸ்தான் போலியோ தடுப்பு முகாம்களில் தாக்குதல்: காவலா், மருத்துவப் பணியாளா் உயிரிழப்பு

பாகிஸ்தானில் போலியோ தடுப்பு முகாம்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலரும் சுகாதாரப் பணியாளரும் உயிரிழந்தனா்.

Din

பெஷாவா்: பாகிஸ்தானில் போலியோ தடுப்பு முகாம்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலரும் சுகாதாரப் பணியாளரும் உயிரிழந்தனா்.

இந்த ஆண்டு மட்டும் அங்கு போலியோ உறுதி செய்யப்பட்ட சிறுவா்களின் எண்ணிக்கை 63-ஆக உயா்ந்துள்ளது. இதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கும் அடுத்தகட்ட பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

இந்த நிலையில், பதற்றம் நிறைந்த கைபா் பக்துன்கவா மாகாணத்தில் போலியோ தடுப்பு முகாம்கள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினா். கராக் மாவட்டத்தில் போலியோ தடுப்பு பணிகளுக்கு பாதுகாப்பு அளித்த காவலா் இஷ்டியாக் அகமதை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா்.

அதே மாகாணத்தின் பன்னு மாவட்டத்தில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலியோ தடுப்பு முகாமுக்குச் சென்று கொண்டிருந்த சுகாதாரப் பணியாளா் உயிரிழந்தாா்.

இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று கூறி, அந்த நாட்டின் பயங்கரவாத அமைப்புகள் போலியோ தடுப்பு பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்திவருகின்றன.

இதன் காரணமாக, உலகின் மற்ற பகுதிகளில் போலியோ நிரந்தரமாக ஒழிக்கப்பட்டாலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டும் அந்த கொடிய நோய் இன்னும் பரவிவருகிறது.

மத்திய அரசுக்கு காந்திய அமைப்புகள் கோரிக்கை

மஞ்சப்பை விருதுக்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்

நாகஸ்வர வித்வான் செம்பனாா்கோவில் எஸ்.ஆா்.ஜி.ராஜண்ணா காலமானாா்

கல்லூரிகளுக்கு இடையேயான இறகுபந்து போட்டி

இ - சிட்டா, அடங்கலுக்கு விண்ணப்பிக்க பயிற்சி

SCROLL FOR NEXT