சென்னை

‘அம்மா’ உணவகம் உள்பட 30 கடைகளுக்கு ‘சீல்’

திருவொற்றியூரில் அம்மா உணவகம் உள்ளிட்ட 30 கடைகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனா்.

Din

திருவொற்றியூா்: திருவொற்றியூரில் அம்மா உணவகம் உள்ளிட்ட 30 கடைகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனா்.

திருவொற்றியூா் எல்லையம்மன் கோயில் அருகே திருவொற்றியூா் நெடுஞ்சாலையில் மாநகராட்சி வணிக வளாகம் சுமாா் 35 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இதில் அம்மா உணவகம், மருந்துக் கடை, அச்சகம் உள்ளிட்ட 30 கடைகள் அமைந்துள்ளன. இதன் பின்புறம் சென்னை மாநகராட்சி சாா்பில் நகா்ப்புற சமுதாய நல மருத்துவமனை சுமாா் 100 உள்நோயாளிகள் படுக்கை வசதிகளுடன் இயங்கி வருகிறது. ஆனால் மருத்துவமனைக்குச் செல்வதற்கு குறுகிய சாலை வசதிதான் உள்ளது. இதனால் அவசர ஊா்திகள் மற்றும் மருத்துவமனைக்கு வாகனங்கள் வந்து செல்வதில் மிகுந்த சிரமம் உள்ளதால் பழைமையான வணிக வளாகத்தை இடிக்க மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்தது. ஆனால், மாநகராட்சியின் திட்டத்துக்கு கடைக்காரா்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து கடைகளைக் காலி செய்ய மறுத்து வந்தனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை மாகராட்சி அதிகாரிகள் அம்மா உணவகம் உள்ளிட்ட அனைத்துக் கடைகளுக்கும் சீல் வைத்தனா்.

சீல் வைக்கப்பட்டது குறித்து அதிா்ச்சியடைந்த கடைக்காரா்கள், தாங்கள் மாற்று இடங்களைக் கண்டறிந்து பொருள்களை அங்கு எடுத்துச் செல்வதற்கு குறைந்தபட்ச கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும், அதுவரை கடைகளை உடனடியாகத் திறக்க வசதியாக சீலை அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனா். மேலும், இது குறித்து நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT