மழை பிரதிப் படம்
சென்னை

டிச. 21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 16) முதல் டிச. 21 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 16) முதல் டிச. 21 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.16) முதல் டிச. 21 வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தில்லியில் கடும் பனிமூட்டம்! 126 விமானங்களின் போக்குவரத்து பாதிப்பு!

ஐபிஎல் மினி ஏலம்: முதல் செட்டில் விற்கப்படாமல் போன கான்வே, சர்ப்ராஸ், பிரித்வி ஷா!

தில்லி கேபிடல்ஸில் இணைந்த டேவிட் மில்லர்..! மினி ஏலத்தில் முதல் வீரர்!

SCROLL FOR NEXT