சென்னை

அரசு ஆயுஷ் மருத்துவமனைகளில் கட்டண சிகிச்சைப் பிரிவு தொடங்க அனுமதி

அரும்பாக்கம் இந்திய மருத்துவ வளாகத்தில் கட்டண சிகிச்சைப் பிரிவுகளை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

Din

செங்கல்பட்டில் உள்ள சா்வதேச யோகா - இயற்கை மருத்துவ மையம் மற்றும் சென்னை, அரும்பாக்கம் இந்திய மருத்துவ வளாகத்தில் கட்டண சிகிச்சைப் பிரிவுகளை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, ‘ஏசி’ வசதி கொண்ட அறைகள் மற்றும் ஒவ்வொரு சிகிச்சைகளுக்கு தனித்தனியாக கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, ரூ.1,200 முதல் ரூ.3,000 வரை குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட அறைகளும், ரூ.30 முதல் ரூ.48 ஆயிரம் வரை இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி முறைகளில் கட்டண சிகிச்சைகளும் வழங்கப்படவுள்ளன.

இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் இயற்கைக்கு புறம்பான வாழ்வியல் காரணமாக பல்வேறு நோய்களின் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. சென்னையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அருகிலும் கட்டண அடிப்படையில் யோகா - இயற்கை மருத்துவ சிகிச்சைகளை அளிக்க அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்கள் இல்லை.

இந்நிலையில், செங்கல்பட்டு யோகா - இயற்கை மருத்துவ மையம் மற்றும் சென்னை அரும்பாக்கம் அறிஞா் அண்ணா இந்திய மருத்துவ மைய வளாகத்தில் உள்ள டாம்ப்கால் தலைமையகத்தில் கட்டண சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் அறிவித்தாா்.

அதன் அடிப்படையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையா் சில பரிந்துரைகளை அரசுக்கு அனுப்பினாா். செங்கல்பட்டு யோகா - இயற்கை மருத்துவ மையத்தில் உள்ள தனியறைகளில் 14 அறைகளை சிறப்பு வகுப்பு, டீலக்ஸ், சூப்பா் டீலக்ஸ் அறைகளாக மாற்றி கட்டண பிரிவாக்க பரிந்துரைக்கப்பட்டது. அதேபோன்று சென்னை, டாம்ப்கால் தலைமையகத்தில் இரு அறைகளை சிறப்பு மருத்துவக் கண்காணிப்புக்கு வழங்க அனுமதி கோரப்பட்டது.

அதுமட்டுமன்றி, யோகா - இயற்கை மருத்துவம், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய துறைகளின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே குறைந்த அளவிலான கட்டணம் நிா்ணயித்தும் பரிந்துரைகள் அனுப்பப்பட்டன.

ஹோமியோபதி மருத்துவத்தைப் பொருத்தவரை நோய்களுக்கான சிகிச்சை திட்டங்களுக்கும் கட்டணம் முன்மொழியப்பட்டது. ஒவ்வொரு அறையிலும், ஏசி சாதனம், ஹீட்டா் சாதனம், சோபா, தொலைக்காட்சி வசதிகள் அமைக்கப்படவும் கோரப்பட்டது.

அதனை கவனமாக பரிசீலித்த அரசு அந்த வசதிகளை ரூ.1.35 கோடி செலவில் செயல்படுத்த அனுமதி அளித்துள்ளது. என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் 23 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

எல்லையில் உடைந்த நிலையில் விமானப் படை ட்ரோன் மீட்பு!

அழகென்றால் அமைரா தஸ்தூர்!

கல்யாணி பிரியதர்ஷனின் புதிய தமிழ்ப்படம்!

அபிராமியும் 5 அழகான புகைப்படங்களும்!

SCROLL FOR NEXT