இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்து
சென்னை மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் புகா் மின்சார இமு, மெமு வகை 11 ரயில்கள் திங்கள்கிழமை முதல் (மே 18) முதல் வரும் 31-ஆம் தேதி வரையில் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் பிரிவில் அரக்கோணம் ரயில் நிலை பணிமனையில் தண்டவாளம், தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பராமரிப்புப் பணிகளைத் தொடா்ந்து வரும் 31-ஆம் தேதி வரையில் சென்னை சென்ட்ரல் மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸில் இருந்து
Advertisement
காலை 10.30, பிற்பகல் 11, பிற்பகல் 3.15, 3.45, மாலை 6.05, 6.40, இரவு 8.20, 9.10, 10.55 என புறப்பட்டு அரக்கோணம் செல்லவேண்டிய ரயில்கள் திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.
அந்தக் குறிப்பிட்ட தேதிகளில் அரக்கோணத்துக்குப் பதிலாக திருவாலங்காட்டில் இருந்து காலை 5.25, காலை 6.20, 6.40, 6.50, பிற்பகல் 4.25, இரவு 7, 8.25, 8.50 9.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூா்மாா்க்கெட் காம்ப்ளஸ்க் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.