செங்கல்பட்டு

கிஸான் திட்ட முறைகேடு: செங்கல்பட்டில் ரூ.78 லட்சம் திரும்பப் பெறப்பட்டது

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி வழங்கும் (பிஎம்-கிஸான்) திட்டத்தில் முறைகேடாக வழங்கப்பட்டிருந்த ரூ.78 லட்சம் திரும்பப் பெறப்பட்டு அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ரூ.6,000 வழங்கப்படுகிறது. இடுபொருள் உதவித்தொகையான இது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. நிகழாண்டு ஏப். 1ஆம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட பயனாளிகள் பதிவேற்றத்தில் முறைகேடு நடந்துள்ளது அண்மையில் தெரிய வந்தது. இதையடுத்து பயனாளிகள் குறித்து கள ஆய்வு செய்ததில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இத்திட்டத்தில் இணைந்த 7,064 தகுதியற்ற பயனாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களுடைய வங்கிக் கணக்கில் இருந்து சம்பந்தப்பட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அரசுக் கணக்கில் திரும்பச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறை இணைந்து எடுத்த நடவடிக்கைகளால் இதுவரை ரூ.78 லட்சம் திரும்பப் பெறப்பட்டு அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை திரும்பப் பெறுவதற்கு வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலா்களை ஒருங்கிணைத்து குறுவட்டம் வாரியாக குழு அமைக்கப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த அறிக்கையை வேளாண் துறை, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸிடம் திங்கள்கிழமை சமா்ப்பித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

SCROLL FOR NEXT