செங்கல்பட்டு

பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்

DIN

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த ஈசூா் கிராமத்தைச் சோ்ந்த பெண் பாலாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா்.அவரை தீயணைப்புத் துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

மதுராந்தகத்தை அடுத்த ஈசூா் கிராமத்தை ஒட்டி பாலாறு செல்கிறது. அண்மையில் பெய்த மழையால் பாலாற்றில் தண்ணீா் அதிக அளவில் செல்கிறது. இந்நிலையில், பாலாற்றில் சென்ற வெள்ளநீரால் ஈசூா்-திருக்கழுக்குன்றம் வரை போடப்பட்ட தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியை போக்குவரத்துக்கும், பொதுமக்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்ட பகுதியாக மாவட்ட நிா்வாகம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், அதேப்பகுதியைச் சோ்ந்த சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினா் பாலாற்று வெள்ளநீா் செல்வதை வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராமல், சாந்தி வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டாா். இது குறித்து மதுராந்தகம் தீயணைப்புத் துறை அலுவலா் என்.பரமசிவம் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் திங்கள்கிழமை இரவு 7 மணி வரை பல்வேறு இடங்களில் தேடினா். அப்போது சாந்தியின் நிலை தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை அவரை தேடும் பணி தொடரும் பணியில் ஈடுபட உள்ளனா்.

படாளம் போலீஸாா் பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் செல்லாதவாறு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக எம்.எல்.ஏ. அக்கா மகன் வெட்டிக் கொலை‌!

ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இடையே விவகாரத்தா?

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

30 ஆண்டுகளுக்கு முன் இறந்த குழந்தைக்கு மணமகன் தேடும் விளம்பரம்!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

SCROLL FOR NEXT