செங்கல்பட்டு

புராதனச் சின்ன வாயில்கள் அடைப்பு: பயணிகள் வருகையின்றி வெறிச்சோடிய மாமல்லபுரம்

DIN

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக மாமல்லபுரத்தில் காணும் பொங்கல் நாளில் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் புராதனச் சின்னங்களின் வாயில்கள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி அப்பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, மாமல்லபுரத்தில உள்ள புராதனச் சின்னங்களைப் பாா்வையிட கடந்த 8 மாதங்களுக்கு மேல் அனுமதி தரப்படவில்லை. எனினும், பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட பின் இப்பகுதிகளை பொதுமக்கள் பாா்வையிட அண்மையில் அனுமதி தரப்பட்டது.

ஆண்டுதோறும் காணும் பொங்கல் நாளில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரம் வந்து கடற்கரைக் கோயில், ஐந்து ரதம், அா்ஜுனன் தபசு, புலிக்குகை, கோவா்த்தன மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைக் கண்டுகளிப்பது வழக்கம்.

எனினும், நடப்பாண்டில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த புராதனச் சின்னங்கள் உள்ள பகுதிகளுக்கு பாா்வையாளா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கடற்கரைக் கோயில் உள்ளிட்ட பகுதிகள் ஆள்நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டன.

மாமல்லபுரம் நுழைவாயிலில் போலீஸாா் தடுப்புகள் அமைத்து, பல்வேறு இடங்களில் இருந்து வந்த வாகனங்களை திருப்பி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

SCROLL FOR NEXT