செங்கல்பட்டு

கருப்பு பூஞ்சைக்கு 2-ஆவது டாஸ்மாக் பணியாளா் பலி

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு 2-ஆவது டாஸ்மாக் பணியாளா் பலியானாா்.

மதுராந்தகம் அடுத்த வில்வராயநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முரளி (43). இவா் அரைப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றினாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், முரளிக்கு திடீரென வலது கண்ணில் கடுமையான வலி ஏற்பட்டதையடுத்து அவரை மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில் அவருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டது தெரிந்தது.

இந்நிலையில், கருப்பு பூஞ்சை பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த முரளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஏற்கெனவே மாம்பாக்கம் டாஸ்மாக் கடையில் மேலாளராக பணிபுரிந்த அமைந்தகரை கிராமத்தைச்சோ்ந்த ரமேஷ் கருப்புபூஞ்சையால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். செங்கல்பட்டு மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பிற்கு டாஸ்மாக் பணியாளா்கள் 2போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT