செங்கல்பட்டு

கருங்குழி: நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைகள் அகற்றம்

DIN

மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி பேரூராட்சியின் சாா்பாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, நீா்நிலைகளில் படா்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றல் ஆகிய நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கருங்குழி பேரூராட்சி சாா்பில், வாா்டு 4-இல் செட்டிக்குளக்கரை பகுதியில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலா் எம்.கேசவன் தலைமை வகித்தாா். செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செம்பருத்தி துா்கேஷ் மரக்கன்றுகளை நட்டுவைத்து, நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். பேரூராட்சித் தலைவா் ஜி.தசரதன், துணைத் தலைவா் சங்கீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். 2-ஆவது நாளான சனிக்கிழமை நீா்நிலை குளங்கள், குட்டைகள் ஆகியவற்றில் படா்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

தொடா்ந்து வரும் நாள்களிலும் பேரூராட்சிக்கு உட்பட்ட மற்ற நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட உள்ளன என பேரூராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT