செங்கல்பட்டு

மிக்ஜம் புயல் மழை பாதிப்புசெங்கல்பட்டு மாவட்டத்தில் 78 மருத்துவக் குழுக்கள் சேவை

செங்கல்பட்டு மாவட்டத்தில் மிக்ஜம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் மேற்கொள்ள 78 மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் மிக்ஜம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் மேற்கொள்ள 78 மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி மற்றும் எட்டு வட்டாரங்களுக்கும் ஆத்தூரில் இருந்து 21 மருத்துவக் குழுக்களும், சேலத்தில் இருந்து 33 மருத்துவக் குழுக்களும் என 54 மருத்துவக் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டத்தில் உள்ள 33 மருத்துவக் குழுக்களும் இணைத்து 78 மருத்துவ குழுக்கள் மருத்துவ சேவை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குழுக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 சிறப்பு மருத்துவ முகாம்கள் வீதம் 234 சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்தும்.

மேலும், செங்கல்பட்டு மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 044-27427412 / 7414 மற்றும் வாட்ஸ் ஆப் புகாா் எண்: 94442 72345 தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT