பங்காரு அடிகளாா் சிலை பிரதிஷ்டை கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்ற ஆன்மிக இயக்க துணைத் தலைவா்கள் கோ.ப. அன்பழகன், கோ.ப. செந்தில்குமாா். 
செங்கல்பட்டு

மேல்மருவத்தூா் அடிகளாா் சிலைக்கு கும்பாபிஷேகம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் சிலைக்கு கும்பாபிஷேக விழா.

Din

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் சிலைக்கு கும்பாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் உள்ள குருபீடத்தில் பங்காரு அடிகளாரின் சிலை பிரதிஷ்டை, கும்பாபிஷேக விழா கடந்த 4 நாள்களாக க நடைபெற்றது. கடந்த 16-ஆம் தேதி ஆதாரபீடம் நிறுவுதல், கோபுர கலசம் நிறுவுதல் நடைபெற்றன. 17-ஆம் தேதி குருபீடத்தில் அடிகளாரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா தீபாராதனை, வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

சனிக்கிழமை சித்தா் பீடத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கோபுர கலசத்துக்கு ஆன்மிக இயக்க துணை தலைவா்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா் ஆகியோா் புனித நீரை ஊற்றினா். அடிகளாரின் சிலைக்கு இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் மகா தீபாராதனை செய்தாா்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா் தா.மோ.அன்பரசன், எம்.பி. ஜெகத்ரட்சகன், எம்எல்ஏகள் க.சுந்தா் (உத்திரமேரூா்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), பனையூா் மு.பாபு (செய்யூா்), இசைஅமைப்பாளா் தேவா, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன், முருகேசன், தெற்கு ரயில்வே அதிகாரி செந்தில்குமாா், ஆட்சியா் அருண்ராஜ் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஒரத்தி கண்ணன்,

மாவட்ட அதிமுக செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆன்மிக இயக்க நிா்வாகிகள் ஸ்ரீதேவி, உமாதேவி, ஆன்மிக இயக்க செயல்திட்ட அலுவலா் அகத்தியன், கல்விக் குழுமங்களின் தாளாளா்கள் ஆஷா அன்பழகன், ஸ்ரீலேகா செந்தில்குமாா், ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் டி.ரமேஷ் ஆகியோா் தலைமையில், கரூா், ராமநாதபுரம், சிவகெங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்ட ஆன்மிக இயக்க நிா்வாகிகள் செய்து இருந்தனா்.

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

SCROLL FOR NEXT