முகப்பு
சென்னை

விவசாயிகளை அச்சுறுத்தும் வேளாண் மன்ற சட்டம்

சென்னை, ஆக. 6:     தமிழக அரசு இயற்றியுள்ள தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் குறித்து கடும் அச்சம் எழுந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையின் கடந்த கூட்டத் தொடரின் கடைசி நாளில் விரிவான விவாதம் ஏதுமின்றி

சென்னை

விவசாயிகளை அச்சுறுத்தும் வேளாண் மன்ற சட்டம்

சென்னை, ஆக. 6:     தமிழக அரசு இயற்றியுள்ள தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் குறித்து கடும் அச்சம் எழுந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையின் கடந்த கூட்டத் தொடரின் கடைசி நாளில் விரிவான விவாதம் ஏதுமின்றி

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:03 PM
பகிர்:

சென்னை, ஆக. 6:     தமிழக அரசு இயற்றியுள்ள தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் குறித்து கடும் அச்சம் எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் கடந்த கூட்டத் தொடரின் கடைசி நாளில் விரிவான விவாதம் ஏதுமின்றி இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் வேளாண் தொழிலை முறைப்படுத்தும் சட்டம் இப்போது இல்லை எனவும், வேளாண் நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக இச்சட்டம் கொண்டு வரப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இச்சட்டத்தின் கீழ் அமைக்கப்படும் மாநில வேளாண்மை மன்றத்தில் வேளாண்மை பட்டம் பெற்ற நிபுணர்கள் தங்களை பதிவு செய்து கொள்வது அவசியம். பதிவு செய்தவர்கள் மட்டுமே இனி வேளாண்மை சார்ந்த தொழிலில் நிபுணர்களாக பணி செய்ய முடியும்.

அவ்வாறு பதிவு செய்யப்பட்டவர்களில் 20 பேரும், வேளாண்மை, தோட்டக் கலை, வானவியல், வேளாண்மை பொறியியல், மனையியல் ஆகிய அரசுத் துறைகளில் பணியாற்றும் நிபுணர்களில் சிலரும் வேளாண்மை மன்றப் பொறுப்புகளை வகிப்பார்கள். இந்த வேளாண்மை மன்றத்தில், காலம் காலமாக விவசாயம் செய்து வரும் அனுபவம் மிகுந்த விவசாயிகளுக்கு இடம் இல்லை.

இயற்கை விவசாய முறைகளில் இன்று "பஞ்சகவ்யம்' இந்தியா முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதனை அறிமுகம் செய்தவர் ஈரோடு மாவட்டம் கொடுமுடியைச் சேர்ந்த டாக்டர் நடராஜன்.

ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு செல்லும் நிலை 1996-ல் ஏற்பட்டது. அப்போது டெக்கான் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த பி.வி. சதீஷ் அந்த விவசாயிகளைத் திரட்டி வறட்சியைத் தாங்கி விளையும் நவதானிய விளைச்சலை அறிமுகப்படுத்தினார்.

தண்ணீர், மின்சாரம் போன்ற அரசின் எந்த உதவியும் இன்றி, அந்த விவசாயிகளின் நவதானிய விளைச்சல் அமோகமாக உள்ளது. மக்களுக்காக பொது விநியோக விலையில் தானியங்களை விற்பனை செய்கின்றனர்.

இப்போது தமிழக அரசால் அதிகம் வலியுறுத்தப்படும் செம்மை நெல் சாகுபடி மடகாஸ்கரை பூர்வீகமாகக் கொண்டது. 2000 தொடக்கத்தில் இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாள்வார் போன்றவர்கள்தான் இதனை தமிழகத்துக்கு அறிமுகம் செய்தனர்.

இவர்கள் யாருமே வேளாண்மைப் பட்டதாரிகள் அல்ல. இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவோர் வேளாண்மைத் தொழிலின் மீது அளவற்ற ஆர்வம் கொண்ட தனி நபர்கள் மற்றும் தன்னார்வக் குழுக்கள்தான்.

ஆனால் தமிழக அரசின் புதிய சட்டம் மூலம் இது போன்ற ஆர்வலர்கள் இனி இது போன்ற செயல்களில் ஈடுபட முடியாது. அவ்வாறு ஈடுபட்டால் அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

இது குறித்து நம்மாள்வார் கூறியதாவது:

பசுமைப் புரட்சியை அமல்படுத்துவதில் முன்னின்ற விஞ்ஞானிகள் கூட இன்று மண்ணும், உணவும் நஞ்சாகி விட்டதை ஒப்புக் கொள்கின்றனர். எனவே அதற்கு மாற்றான இயற்கை விவசாய முறைகள் குறித்து நமது பல்கலைக்கழகங்களோ, வேளாண்மைப் பட்டதாரிகளோ எதுவுமே செய்யவில்லை.

இந்நிலையில் மாற்று விவசாயத்துக்கான அதாவது, இயற்கை விவசாய முயற்சிகளை முறியடிக்கவே, இந்த சட்டத்தை இயற்றியுள்ளார்கள் என்ற சந்தேகம் எழுகிறது என்றார் நம்மாள்வார்.

வேளாண்மை மாநில மன்றத்தில் பதிவு செய்த நிபுணர்களின் ஆலோசனை பெறாமல், விவசாயிகள் தங்கள் சொந்த அனுபவ அறிவின் அடிப்படையில் இனி விவசாயம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால், அரசின் எந்த உதவிகளும் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

இது குறித்து தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழுவின் தலைவர் ஷீலு கூறியதாவது:

"இச்சட்டத்தின் மூலம் விதை உள்பட அனைத்து சாகுபடி தேவைகளுக்கும் நம் விவசாயிகள் பன்னாட்டு ஏகபோக கம்பெனிகளின் தயவை நாடி நிற்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் இது குறித்த விழிப்புணர்வு நம் விவசாயிகளுக்கு இல்லை.

எனவே விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் மத்தியில் இப்பிரச்னை குறித்து தீவிரமாக பிரசாரம் செய்ய உள்ளோம்' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →