முகப்பு
சென்னை

பொட்டாஷ் ஏற்றுமதி மோசடி: சங்கிலித் தொடராக செயல்பட்டோர் யார்?

திருவொற்றியூர், ஆக. 23: மானிய விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பொட்டாஷை 'இன்டஸ்ட்ரியல் சால்ட்' என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த விவகாரத்தின் பின்னணியில் செயல்பட்டுள்ளவர்கள் பற்றி மத்திய அரசு

சென்னை

பொட்டாஷ் ஏற்றுமதி மோசடி: சங்கிலித் தொடராக செயல்பட்டோர் யார்?

திருவொற்றியூர், ஆக. 23: மானிய விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பொட்டாஷை 'இன்டஸ்ட்ரியல் சால்ட்' என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த விவகாரத்தின் பின்னணியில் செயல்பட்டுள்ளவர்கள் பற்றி மத்திய அரசு

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:18 PM
பகிர்:

திருவொற்றியூர், ஆக. 23: மானிய விலையில் இறக்குமதி செய்யப்பட்ட பொட்டாஷை 'இன்டஸ்ட்ரியல் சால்ட்' என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த விவகாரத்தின் பின்னணியில் செயல்பட்டுள்ளவர்கள் பற்றி மத்திய அரசு விசாரிக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.

  பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொட்டாஷை "இன்டஸ்ட்ரியல் சால்ட்' என்ற பெயரில் ஏற்றுமதி செய்தது மோசடி தொடர்பாக அண்மையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

  பொட்டாஷ் இறக்குமதி செய்ய ஒரு டன்னுக்கு ரூ.31 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் பொட்டாஷ் வகை உரங்கள் டன் ரூ.5 ஆயிரத்துக்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

  இதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட உர ஆலைகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.26 ஆயிரத்தை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது.

  ஆனால், தீக்குச்சி, வெடிமருந்துக்கு மூலப் பொருளான பொட்டாசியம் குளோரைடு (கே.சி.எல்.3) தயாரிக்கும் ஆலைகளுக்கு பொட்டாஷுக்கான மானியம் ஏதும் வழங்கப்படுவதில்லை.

  எனவே தற்போது நடைபெற்றுள்ள மோசடி விவகாரங்களில் பொட்டாசியம் குளோரைடு தயாரிக்கும் ஆலைகளுக்கும் பங்கு இருக்கும் என கூறப்படுகிறது.

  மோசடி குறித்து உர ஆலைகள், சுங்கத் துறை, கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கூறியதாவது:

  மத்திய அரசு பொட்டாஷுக்கு மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி மானியம் வழங்குகிறது. இந்நிலையில் இத்தகைய பொருள்கள் பயனாளிகளுக்கு முறையாக போய்ச் சேருகிறதா என்பதை சரியாக கண்காணிக்காமல் விட்டது எப்படி?

  பொட்டாஷ் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், உர ஆலைகள், விவசாய கூட்டுறவு சங்கங்கள், அங்கீகாரம் பெற்ற விற்பனை அங்காடிகள், வாங்கி உபயோகிக்கும் விவசாயிகள் என பல்வேறு தரப்பிலிருந்தும் பொட்டாஷ் வெளியே சென்றிருக்க வாய்ப்புள்ளது.

  ஆனால் ஏற்றுமதியான அளவைப் பார்க்கும்போது அனைத்து இடங்களிலும் தவறு நடைபெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.

  ஏற்றுமதி செய்தவர்களிடம் விசாரித்தபோது தங்களுக்கு பொட்டாஷ் குறித்தோ, யார் தங்களுக்கு அனுப்பினார்கள், மலேசியாவில் இறக்குமதி செய்வது யார் என்பதே தெரியாது எனவும், ஒரு கண்டெய்னருக்கு இவ்வளவு என கமிஷன் மட்டுமே கொடுத்தார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

  ஏற்றுமதி செய்யப்பட்டது பொட்டாஷ்தான் என்பதைக் கண்டறிய 18 மாதங்கள் ஆனது ஏன்?

  மேலும் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களில் மட்டும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதர துறைமுகங்களில் தொடர்ந்து பொட்டாஷ் ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

  எனவே மத்திய அரசு உடனே தலையிட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட பொட்டாஷ் எவ்வளவு? யார் யார் ஏற்றுமதி செய்துள்ளனர்? இடைத் தரகர்களாக செயல்பட்டவர்கள் யார்? சங்கிலித் தொடர்போல் செயல்பட்ட அனைவரையும் கண்டுபிடித்தால் மட்டுமே இதில் நடைபெற்றுள்ள பல ஆயிரம் கோடி மோசடி விவகாரம் வெளிச்சத்துக்கு வரும் என்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →