முகப்பு
சென்னை

குடிநீரை விநியோகிக்க கட்டமைப்பு வசதிகள் இல்லை

திருவொற்றியூர், ஜூலை 16:   சென்னையை அடுத்த திருவொற்றியூர் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவொற்றியூர் நகர

சென்னை

குடிநீரை விநியோகிக்க கட்டமைப்பு வசதிகள் இல்லை

திருவொற்றியூர், ஜூலை 16:   சென்னையை அடுத்த திருவொற்றியூர் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவொற்றியூர் நகர

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:45 PM
பகிர்:

திருவொற்றியூர், ஜூலை 16:   சென்னையை அடுத்த திருவொற்றியூர் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்ய போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் திருவொற்றியூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் தினமும் முற்றுகையிடுவது வாடிக்கையாகிவிட்டது.

  திருவொற்றியூரில் உள்ள 48 வார்டுகளில் சுமார் 2.8 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். லேலண்டு, அனல்மின் நிலையம், சி.பி.சி.எல். உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கனரக தொழில் மற்றும் வடிவுடையம்மன், பட்டினத்தார் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்கள் உள்ளன. இவ்வாறு பல முக்கியத்துவங்களைப் பெற்ற திருவொற்றியூரில் பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது.

  இங்குள்ள 70 ஆயிரம் வீடுகளில் 3,200 வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. திருவொற்றியூரின் மேற்கு பகுதிகளான சிவசக்திநகர், சண்முகபுரம், சக்திபுரம், ராஜாஜி நகர் உள்ளிட்ட பகுதிகள், தாங்கல் தியாகராயபுரம், சாத்துமாநகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இங்கு நான்கு நாட்கள் முதல் ஒரு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குறைந்த அளவில் குடிநீர் வழங்கப்படுகிறது.

  மொத்தம் உள்ள 48 வார்டுகளில் 28-ல் மட்டுமே நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மற்ற இடங்களில் நிலத்தடி நீர் மற்றும் தனியார் லாரிகளை பொதுமக்கள் நம்பியுள்ளனர். எண்ணூர் அனல் மின் நிலையம் செல்லும் குடிநீர் குழாய் மூலம் சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் பெறுகின்றனர். இதை நிறுத்திவிட எண்ணூர் அனல்மின் நிலையம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதை நிறுத்தினால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கபடுவர் என்கிறார் அ.தி.மு.க கவுன்சிலர் வி.அமல்ராஜ்.

  கட்டமைப்பு வசதிகள் இல்லை: குடிநீர் தட்டுப்பாட்டுக்கான காரணம் குறித்து நகராட்சி ஊழியர்கள் சிலர் கூறியது,

  திருவொற்றியூருக்கு குடிநீர் வழங்கும் குழாய்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. இதன்மூலம் தற்போது நாளொன்று 25 லட்சம் லிட்டர் தண்ணீரையே பெற முடியும். கூடுதலாக மூன்று இடங்களில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டாலும் அவற்றுக்கு தனியாக குழாய்கள் பதிக்கப்படாததால் கூடுதல் தண்ணீரை சேமிக்க முடியவில்லை.

  உலக சுகாதார நிறுவன விதிகளின்படி நபருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் வழங்கப்பட வேண்டும். ஆனால் இங்கு நபருக்கு சராசரியாக 11 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது.

  கூடுதலாக குடிநீர் வழங்க மெட்ரோ வாட்டர் நிறுவனம் தயாராக இருந்தாலும் அதைப் பெற்று விநியோகிக்கும் வகையில் குழாய், மேல்நிலைத் தொட்டிகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தவில்லை.

  திருவொற்றியூர் நகருக்கு குடிநீர் வழங்கும் ரூ.88 கோடியிலான சிறப்புத் திட்டத்துக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டினார். ஆனால் அதிகாரிகளின் மெத்தன போக்கினால் திட்டம் காகித போக்குவரத்து அளவில்தான் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

  கடற்கரை நகரான திருவொற்றியூரில் அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்படுவதால் கடலோர பகுதிகளில் நிலத்தடி நீர் உப்புநீராக மாறியுள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கும் நிலையில் இதர பகுதிகளும் இதேபோல் பாதிக்கப்படலாம் என்பதால் அரசு இதில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →