சென்னை துறைமுகத்தில் கப்பல் பைலட்டுகளுக்குப் பற்றாக்குறை: அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு
திருவொற்றியூர், ஜூலை 24: சென்னை துறைமுகத்தில் தொடர்ந்து நிலவி வரும் கப்பல் பைலட்டுகள் பற்றாக்குறையால் கப்பல்களை இயக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் அரசுக்கு மாதந்தோறும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்ப
சென்னைசென்னை துறைமுகத்தில் கப்பல் பைலட்டுகளுக்குப் பற்றாக்குறை: அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு
திருவொற்றியூர், ஜூலை 24: சென்னை துறைமுகத்தில் தொடர்ந்து நிலவி வரும் கப்பல் பைலட்டுகள் பற்றாக்குறையால் கப்பல்களை இயக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் அரசுக்கு மாதந்தோறும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்ப
திருவொற்றியூர், ஜூலை 24: சென்னை துறைமுகத்தில் தொடர்ந்து நிலவி வரும் கப்பல் பைலட்டுகள் பற்றாக்குறையால் கப்பல்களை இயக்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் அரசுக்கு மாதந்தோறும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியாவின் கிழக்கு நுழைவு வாயிலாக சென்னை துறைமுகம் உள்ளது. தற்போது முக்கிய துறைமுகங்களிலிருந்து மாதத்திற்கு சுமார் 300 முதல் 350 கப்பல்கள் இங்கு வந்து செல்கின்றன. நிலக்கரி, கச்சா எண்ணெய், கிரானைட் கற்கள், உரங்கள், உணவு பொருள்கள், பயறு வகைகள், நவீன இயந்திரங்கள், கார்கள், இரும்பு தாது, மரங்கள் உள்ளிட்ட பொருள்கள் அதிக அளவில் கையாளப்படுகின்றன. எனவே சென்னை துறைமுகம் தென்னிந்தியாவின் தொழில் வளர்ச்சில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இவ்வாறு பல்வேறு முக்கியத்துவங்களைப் பெற்றுள்ள சென்னை துறைமுகம் தனது சேவையில் சரிவர கவனம் செலுத்துவதில்லை என புகார் எழுந்துள்ளது.
கப்பல்களை இயக்கும் பைலட்டுகள்: சென்னைக்கு வரும் கப்பல்கள் நடுக்கடலில் நங்கூரமிட்டு முதலில் நிறுத்தப்படும். பின்னர் கப்பலின் வருகை குறித்து துறைமுகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். கப்பற்கூடத்தில் நிறுத்து தளம் (பெர்த்) காலியாக இருப்பதைப் பொறுத்து துறைமுகத்திற்குள் நுழைய கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
இதனை அடுத்து சிறிய ரக கப்பல் மூலம் துறைமுக நிர்வாகத்தில் பணிபுரியும் பைலட் கடலில் நங்கூரமிட்டுள்ள கப்பலுக்குச் சென்று அதில் ஏறிக் கொள்வார். பின்னர் அவர் கப்பலை இயக்கி துறைமுகத்திற்குள் கொண்டு வருவார். அதே போல் சரக்கு ஏற்றிய கப்பல்களை துறைமுகத்திலிருந்து நடுக்கடலில் கொண்டுபோய் விடுவதும் பைலட்டின் பணிதான். இதற்கான சேவைக் கட்டணத்தை கப்பல் நிறுவனத்தினரிடமிருந்து துறைமுகம் வசூலிக்கிறது. இவ்வாறு துறைமுகம் இயங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் பைலட்டுகளுக்கு தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்னை குறித்து கப்பல் நிறுவன முகவர்கள் கூறியது,
பைலட்டுகள் பற்றாக்குறையால் கப்பல்கள் வந்து செல்வதில் கால தாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொரு கப்பலும் சுமார் 4 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை தாமதமாக இயக்கும் நிலை தற்போது நிலவி வருவதாக கப்பல் நிறுவன முகவர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதனால் பெரும்பாலான கப்பல்கள் திட்டமிட்டபடி அடுத்தடுத்த துறைமுகங்களுக்கு செல்ல முடிவதில்லை. மேலும் பெரும்பாலான கப்பல்கள் மாதம் வாயேஜ் (டிரிப்) ரத்தாகி விடுகிறது. இதனால் மாதம் ஒன்றிற்கு ரூ.50 கோடிவரை நட்டம் ஏற்படுகிறது.
இதே நிலை நீடித்தால் சென்னை துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை குறையும். ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் பாதிக்கப்படும். சென்னை துறைமுகத்தின் வருவாயும் கணிசமாக குறையும் அபாயம் உள்ளது. எனவே துறைமுக நிர்வாகம் உடனடியாக இப்பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
பற்றாக்குறை ஏன்?: பைலட்டுகள் பற்றாக்குறை பிரச்னை குறித்து துறைமுக அதிகாரிகள் கூறியது:
சென்னை துறைமுகத்தில் பைலட்டுகள் தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். தற்போது 7 பைலட்டுகளே உள்ளனர். ஆனால் கூடுதல் பைலட்டுகள் வேலைக்கு சேர்ப்பதில் சிக்கல் உள்ளது. துறைமுக பணியில் உள்ள பைலட்டுகளுக்கு ரூ. 40 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.
ஆனால் தனியார் நிறுவனங்களில் சுமார் ரூ.1.50 லட்சம் வரை சம்பளம் கிடைப்பதால் துறைமுக பணிக்கு தகுதியான பைலட்டுகள் கிடைப்பதில்லை. மேலும் பைலட் தட்டுப்பாடும் உள்ளது. இதற்கு மத்திய அரசுதான் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் அளவில் ஏதும் செய்ய இயலாது என்றனர்.
சென்னை துறைமுகத்தில் நிலவி வரும் இப்பிரச்னை குறித்து தமிழகத்தை சேர்ந்த மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கவனம் செலுத்த வேண்டும் என துறைமுக உபயோகிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.