முகப்பு
சென்னை

நடுக் கடலில் தத்தளிக்கிறது "கேப்டன் அலி'

திருவொற்றியூர், ஜூன் 25:   இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண பொருள்களை ஏற்றி வந்த "கேப்டன் அலி' என்ற கப்பல் கடந்த இருபது நாள்களுக்கும் மேலாக இலங்கை, இந்திய கடல் எல்லைகளில் தத்தளித

சென்னை

நடுக் கடலில் தத்தளிக்கிறது "கேப்டன் அலி'

திருவொற்றியூர், ஜூன் 25:   இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண பொருள்களை ஏற்றி வந்த "கேப்டன் அலி' என்ற கப்பல் கடந்த இருபது நாள்களுக்கும் மேலாக இலங்கை, இந்திய கடல் எல்லைகளில் தத்தளித

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:28 PM
பகிர்:

திருவொற்றியூர், ஜூன் 25:   இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிவாரண பொருள்களை ஏற்றி வந்த "கேப்டன் அலி' என்ற கப்பல் கடந்த இருபது நாள்களுக்கும் மேலாக இலங்கை, இந்திய கடல் எல்லைகளில் தத்தளித்து வருகிறது.

இலங்கை ராணுவத்தினர் நடத்திய சோதனையில் கப்பலில் ஆயுதங்கள் ஏதும் இல்லை என நிரூபிக்கப்பட்ட பின்னரும் இலங்கையோ, இந்தியாவோ ஏன் தங்கள் நாட்டில் அனுமதிக்கவில்லை என பல்வேறு நாட்டின் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையில் சென்னைத் துறைமுகத்தில் கப்பலை அனுமதிக்கும் விவகாரத்தில் அதிகாரிகள் மனிதாபிமானமற்ற வகையில் செயல்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பிரிட்டனில் உள்ள "மெர்சி மிஷன்' என்ற தொண்டு நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மூலம் மருந்து, உணவு பொருள்கள் உள்ளிட்ட நிவாரண பொருள்களை திரட்டியது. 884 மெட்ரிக் டன் நிவாரண பொருள்களை சிரியா நாட்டைச் சேர்ந்த 'கேப்டன் அலி' கப்பல் மே 7-ம் தேதி பிரான்ஸ் நாட்டிலிருந்து புறப்பட்டது.

"வணங்கா மண்' என பெயரிடப்பட்ட இக்கப்பல் இலங்கை கடல் எல்லையில் நுழைந்தவுடன் அதில் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி இலங்கை கடற்படை அக்கப்பலை கைப்பற்றி கொழும்பு துறைமுகம் கொண்டு சென்றது. அங்கு ராணுவம் தீவிர சோதனை நடத்தியதில் அதில் எவ்வித ஆயுதங்களும் இல்லை என்பதை உறுதி செய்தது. ஆனாலும் சர்வதேச துறைமுக பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்கவில்லை எனக் கூறி கப்பலை நூறு கடல் மைல்களுக்கு அப்பால் கொண்டு போய் விடுவித்தது.

சென்னைத் துறைமுகத்திற்கு.... இதையடுத்து நிவாரணப் பொருள்களை இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு வழங்கிட மெர்சி மிஷன் முயற்சித்தது. எனவே சென்னைத் துறைமுகத்திற்கு கப்பலை கொண்டு செல்லும்படி கூறியது அந்நிறுவனம். ஆனால் இந்திய அரசு இது குறித்து முடிவு ஏதும் எடுக்காத நிலையில் தம்மால் ஏதும் செய்ய இயலாது என துறைமுக நிர்வாகம் கைவிரித்தது.

மேலும் இந்திய கடல் எல்லையில் கப்பலை நிலை நிறுத்த வேண்டும் எனில் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும் என கூறப்பட்டது.

இந்நிலையில் கப்பலில் குடிநீர் தீர்ந்து போனது. இது குறித்து சென்னைத் துறைமுகத்தின் உதவியை கப்பலின் சென்னை ஏஜென்சி நாடியது. இதையடுத்து இந்திய கடல் எல்லையில் கப்பலை நிலைநிறுத்த கட்டணமாக ரூ. 99,700-ஐ கப்பல் நிறுவன ஏஜென்சி செலுத்தியது. இதைத் தொடர்ந்து துறைமுகத்திற்கு மிக அருகில் கப்பல் கொண்டுவர அனுமதிக்கப்பட்டது. பின்னர் 200 டன் (2 லட்சம் லிட்டர்) குடிநீர் கப்பலுக்கு அனுப்பப்பட்டது. இதற்கான செலவு முழுவதும் கப்பலின் ஏஜென்சி செய்ததாக அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் சென்னைத் துறைமுகம்தான் மனிதாபிமான அடிப்படையில் குடிநீரை வழங்கியதாக சென்னைத் துறைமுக தலைவர் கே.சுரேஷ் பத்திரிகை குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →