முகப்பு
சென்னை

தி.மு.க. - மார்க்சிஸ்ட் மோதல்; முடங்கும் திருவொற்றியூர் நகராட்சி

திருவொற்றியூர், அக். 11: திருவொற்றியூரில் நகர்மன்ற தலைவர் மற்றும் தி.மு.க கவுன்சிலர்களிடையே ஏற்பட்டுள்ள மோதலால் நகராட்சிப் பணிகள் ஸ்தம்பித்துப்போய் உள்ளன.  மார்க்சிஸ்ட் நகர்மன்ற தலைவர்:திருவொற்றியூர்

சென்னை

தி.மு.க. - மார்க்சிஸ்ட் மோதல்; முடங்கும் திருவொற்றியூர் நகராட்சி

திருவொற்றியூர், அக். 11: திருவொற்றியூரில் நகர்மன்ற தலைவர் மற்றும் தி.மு.க கவுன்சிலர்களிடையே ஏற்பட்டுள்ள மோதலால் நகராட்சிப் பணிகள் ஸ்தம்பித்துப்போய் உள்ளன.  மார்க்சிஸ்ட் நகர்மன்ற தலைவர்:திருவொற்றியூர்

Updated On : 25 டிசம்பர், 2023 at 3:55 PM
பகிர்:

திருவொற்றியூர், அக். 11: திருவொற்றியூரில் நகர்மன்ற தலைவர் மற்றும் தி.மு.க கவுன்சிலர்களிடையே ஏற்பட்டுள்ள மோதலால் நகராட்சிப் பணிகள் ஸ்தம்பித்துப்போய் உள்ளன.

 மார்க்சிஸ்ட் நகர்மன்ற தலைவர்:திருவொற்றியூர் நகராட்சியில் கவுன்சிலர்களாக தி.மு.க-31, அ.தி.மு.க-11, காங்.-4, மார்க்சிஸ்ட்-2 பேர் உள்ளனர். நகர்மன்றத் தலைவராக ஆர்.ஜெயராமனும் (மார்க்சிஸ்ட்), துணைத் தலைவராக வி.ராமநாதனும் (தி.மு.க.) பொறுப்பில் உள்ளனர்.

  துணைத் தலைவர், ஒப்பந்தக் குழு, பணியாளர் நியமனக் குழு உள்ளிட்டவைகளில் தி.மு.கவினர் பொறுப்பு ஏற்றதால் நகராட்சியில் அக்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். மேலும் நகர்மன்ற தலைவர் ஜெயராமனும் தி.மு.க-வினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார்.

முறிந்த கூட்டணி:  இந்நிலையில் கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்தது. இது திருவொற்றியூர் நகராட்சியிலும் எதிரொலித்தது. இதனை அடுத்து மெட்ரோ ரயில், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பிரச்னைகளில் நகர்மன்ற தலைவர் ஜெயராமன் தி.மு.க அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

  இதில் கோபமடைந்த தி.மு.க.வினர் நகர்மன்ற தலைவரின் போராட்டத்தை "கபட நாடகம்' என விமர்சித்து நகர் முழுவதும் "போஸ்டர்' அடித்து ஒட்டினர்.

சுணக்கம்:   இதுபோன்ற பிணக்குகளால் நகராட்சிப் பணிகள், ஒப்பந்தங்களை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டது. இதில் மின்விளக்குகளை பராமரிக்க ஒப்பந்தம் விடுவதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நகர் முழுதும் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கி உள்ளன.

தனியார்மயத்திற்கு தி.மு.க ஆதரவு:   தி.மு.க-வினருடன் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து நகர்மன்ற தலைவர் ஜெயராமன் கூறியது:

  தெருவிளக்குகளைப் பராமரிப்பதில் ஒட்டு மொத்தமாக தனியாருக்கு அளிக்க தி.மு.க கவுன்சிலர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே முடிவு செய்தபடி 13 வார்டுகளை மட்டுமே தனியாருக்கு அளிக்க வேண்டும் என்ற மன்ற தீர்மானத்திற்கு எதிராக ஆணையரை தி.மு.கவினர் வழி நடத்துகின்றனர்.

  மேலும் சாலை விரிவாக்கம், பாதாள சாக்கடை திட்டம், ரூ.87 கோடி சிறப்பு குடிநீர் திட்டம் உள்ளிட்டவைகளில் தாமதத்திற்கு தி.மு.க அரசுதான் பொறுப்பு. தி.மு.கவினர் நகர்மன்ற தலைவரின் உரிமையை மதிக்க மறுக்கின்றனர். ஏற்கனவே குடிநீர், குப்பை அகற்றுதலை தனியாருக்கு அளித்ததில் முறைகேடு உள்ளது.

  இந்நிலையில் தெருவிளக்குகளைப் பராமரிப்பதை தனியாருக்கு அளிக்க தி.மு.கவினர் கோருவதில் 'உள்நோக்கம்' உள்ளது. பணிகளை நகராட்சியே செய்வதால் செலவு மிச்சமாகிறது. பணியாளர்களுக்கு வேலையும் கிடைக்கிறது. இதனை எதிர்ப்பது ஏன்?. பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதற்காக தி.மு.கவினரின் கைப்பாவையாக என்னால் செயல்பட முடியாது என்றார் ஜெயராமன்.

நகர செயலாளர் குற்றச்சாட்டு:இது குறித்து தி.மு.க நகர செயலாளரும், கவுன்சிலருமான தி.மு.தனியரசு கூறியது:

  தி.மு.க-வினரின் ஆதரவுடன்தான் நகர்மன்ற தலைவராக ஜெயராமன் உள்ளார். ஆனால் அவர் எங்களை உதாசீனப்படுத்துகிறார். தெருவிளக்குகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் அவற்றைப் பராமரிக்க போதுமான பணியாளர்கள் இல்லாததால் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்படும் வரை 48 வார்டுகளையும் தனியாருக்கு அளிக்க வேண்டும் என்பது தி.மு.கவின் நிலைப்பாடு.

  துணை முதல்வர் கவனிப்பாரா?   தி.மு.க-மார்க்சிஸ்ட் கட்சியினரின் மோதல் போக்கால் திருவொற்றியூர் நகராட்சி பணிகள் ஸ்தம்பித்துப்போய் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  எனவே உள்ளாட்சி துறையை தன்வசம் வைத்திருக்கும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு இப்பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்து பணிகளை முடுக்கி விடவேண்டும் என்பதே திருவொற்றியூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →