துறைமுக வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம்
திருவொற்றியூர், ஜூலை 20: திருவொற்றியூர் நகராட்சியில் 11.26 ஏக்கர் குத்தகை நிலத்தை சென்னை துறைமுகம் திருப்பி அளித்துள்ளது குறித்து பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால் துறைமுகத்தின் வ
சென்னைதுறைமுக வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம்
திருவொற்றியூர், ஜூலை 20: திருவொற்றியூர் நகராட்சியில் 11.26 ஏக்கர் குத்தகை நிலத்தை சென்னை துறைமுகம் திருப்பி அளித்துள்ளது குறித்து பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால் துறைமுகத்தின் வ
திருவொற்றியூர், ஜூலை 20: திருவொற்றியூர் நகராட்சியில் 11.26 ஏக்கர் குத்தகை நிலத்தை சென்னை துறைமுகம் திருப்பி அளித்துள்ளது குறித்து பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதனால் துறைமுகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
கன்டெய்னர் போக்குவரத்து நெரிசல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்காகப் பெறப்பட்ட குத்தகை நிலம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திருப்பி அளிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
சரக்குக் கையாள்வதில் நாட்டிலேயே 2-வது இடம்: சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் சரக்குப் பெட்டகங்கள் கையாளப்படுகின்றன. இது தவிர இரும்புத் தாது, நிலக்கரி, கிரானைட் கற்கள், உரம், சர்க்கரை உள்ளிட்ட முக்கிய சரக்குகளும் ஏற்றுமதி இறக்குமதியாகின்றன.
கடந்த ஆண்டு சுமார் 6.15 கோடி டன் அளவுக்கு சரக்குகளைக் கையாண்டு நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், 2.74 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தற்போது தினமும் 10 ஆயிரம் கனரக லாரிகள் துறைமுகத்துக்கு வந்து செல்கின்றன.
இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது.
இதை அடுத்து சாலை விரிவாக்கம், வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்காக திருவொற்றியூர் நகராட்சியின் வசம் இருந்து 11.26 ஏக்கர் காலி நிலம் பெறப்பட்டு அங்கு லாரிகள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது. துறைமுகம் கோரியபடி குத்தகை காலத்தை 3 ஆண்டிலிருந்து 18 ஆண்டுகளாக உயர்த்திய பிறகும் திடீரென நிலத்தை திருப்பி அளித்துள்ளதில் துறைமுக உயர் அதிகாரிகள் சிலர் திட்டமிட்டு செயல்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
அவசர முடிவின் பின்னணி: துறைமுகத்தின் வளர்ச்சிக்காகப் பெறப்பட்ட நிலத்தை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சில அதிகாரிகளின் தூண்டுதல் காரணமாக துறைமுக நிர்வாகம் திருப்பி ஒப்படைத்துள்ளதாகத் தெரிகிறது. மாதம் ரூ. 11 லட்சம் வாடகை, ஆண்டுக்கு 5 சதவீதம் வாடகை உயர்வு, ரூ.33 லட்சம் முன்வைப்புத் தொகை, 18 ஆண்டுகள் குத்தகை என்ற அடிப்படையில் திருவொற்றியூர் நகராட்சியிடமிருந்து காலி நிலம் பெறப்பட்டது.
ஆனால், அறிவிக்கப்பட்ட டெண்டரில் இதற்கு மாறான விதிமுறைகள் விதிக்கப்பட்டன. இதன் விளைவு ஜூன் 11-ல் இதற்கென நடைபெற்ற டெண்டரில் தகுதியான ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை. இதற்கெனவே காத்திருந்தது போல் இருந்த, குறிப்பிட்ட அதிகாரிகள் உடனடியாக நிலத்தைத் திருப்பி ஒப்படைக்க முடிவு செய்தனர்.
துறைமுக வளர்ச்சி பாதிக்குமா?: எண்ணூர், கிருஷ்ணாபட்டனம், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்கள் சென்னைத் துறைமுகங்களுக்கு சவால் விடும் வகையில் வளர்ச்சி பெற்று வருகின்றன.
இந்நிலையில் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து சரக்குகளை இறக்கிட யார் காத்திருப்பார்கள்? எங்கு விரைவாக கையாளப்படுகிறதோ அங்கு சென்று விடுவார்கள் என்பதே நிதர்சன உண்மை. இட நெருக்கடியில் தவிக்கும் சென்னைத் துறைமுகம் காலி நிலத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முயற்சிக்காமல் அவசர கதியில் திருப்பி அளித்திருப்பதால் துறைமுக வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதே பலரின் கருத்தாகும்.