கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத மீனவர் நிவாரணத் தொகை: 45 நாள் தடை முடிவுக்கு வந்தும் வழங்கப்படவில்லை
திருவொற்றியூர், மே 29: வங்கக்கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட காலங்களில் வழங்க வேண்டிய மீனவர் நிவாரணத் தொகை, 45 நாள் தடைக்காலம் முடிவுக்கு வந்த பிறகும் வழங்கப்படவில்லை. இது மீனவர்கள் மத்தியில்,
சென்னைகைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத மீனவர் நிவாரணத் தொகை: 45 நாள் தடை முடிவுக்கு வந்தும் வழங்கப்படவில்லை
திருவொற்றியூர், மே 29: வங்கக்கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட காலங்களில் வழங்க வேண்டிய மீனவர் நிவாரணத் தொகை, 45 நாள் தடைக்காலம் முடிவுக்கு வந்த பிறகும் வழங்கப்படவில்லை. இது மீனவர்கள் மத்தியில்,
திருவொற்றியூர், மே 29: வங்கக்கடலில் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்ட காலங்களில் வழங்க வேண்டிய மீனவர் நிவாரணத் தொகை, 45 நாள் தடைக்காலம் முடிவுக்கு வந்த பிறகும் வழங்கப்படவில்லை. இது மீனவர்கள் மத்தியில், தமிழக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சென்னை காசிமேடு, கடலூர், நாகை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. ஃபைபர் மற்றும் கட்டுமரங்களில் மீன் பிடிக்கும் வழக்கம் இருந்தாலும் விசைப்படகுகள் மூலம்தான் சுமார் 80 சதவீத மீன்கள் பிடிக்கப்படுகின்றன.
மேலும், இதில் சுமார் ஒரு லட்சம் மீனவத் தொழிலாளர்கள் விசைப்படகுகளில் கடலுக்குச் செல்கின்றனர். மீன் விற்பனை உள்ளிட்ட பணிகளில் சுமார் ஒரு லட்சம் பேர் விசைப்படகுகளை நம்பியே உள்ளனர்.
இந்நிலையில் வங்கக் கடலில் மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கில் கடந்த 2000 ஆண்டு முதல், மீன் இனப்பெருக்கக் காலங்களில் 45 நாள்கள் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இதை அடுத்து ஏப்.15 முதல் மே 29 வரை தமிழக கடல்பகுதியில் மீன் பிடிக்க ஆண்டுதோறும் தடை உள்ளது. இதனால் ஏழை மீனவர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது. எனவே தடை விதிக்கப்படும் காலத்திற்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என பல்வேறு மீனவர் அமைப்புகளும் போராடி வந்தன.
இதை அடுத்து கடந்த ஆண்டு ரூ.500 உதவித் தொகையாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இது இந்த ஆண்டு ரூ.800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மீனவர்களின் அன்றாடச் செலவினங்களுக்காக அறிவிக்கப்பட்ட இத்தொகை தடை காலத்தில் வழங்கப்படவில்லை என புகார்
எழுந்துள்ளது.
வெள்ளிக்கிழமை தடை நீங்கும்வரை இத்தொகை மீனவர்களுக்கு பட்டுவாடா செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிவாரணம்: 45 நாள்களுக்கு ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் வழங்கப்படும் தலா ரூ.800 நிவாரணத்தொகை இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்கப்படவில்லை.
மேலும், உயர்ந்துவரும் விலைவாசியில் உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகையே குறைவு என நாங்கள் போராடி வருகிறோம். இந்நிலையில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை.
நிவாரணத்தொகை என்பதே தடை காலத்தில் வேலையின்றி அவதிப்படும் மீனவர்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்டதுதான். தடை துவங்கிய ஒரு வாரத்திற்குள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், 45 நாள் தடை முடிவடைந்தும் உதவித்தொகையை வழங்காதது ஏன் என புரியவில்லை. மீனவர்கள் கடலுக்குச் சென்றுவிட்டால் பிறகு இத்தொகை வழங்கும் நாள்களில் அவர்களால் நேரில் வர இயலாது அல்லது இத்தொகை வழங்கப்படும் நாள்களில் வேலைக்குச் செல்லாமல் இருக்க வேண்டும்.
ரூ.800 வாங்க ஏறக்குறைய அதற்குச் சமமான அளவு சம்பளத்தை இழக்க வேண்டியதிருக்கும். அரசு உதவி அளித்தும் அதை உரிய காலத்தில் பெற முடியாத நிலையே உள்ளது என்றார் அகில இந்திய மீனவர் சங்க செய்தித்தொடர்பாளர் நாஞ்சில் பி.ரவி.
இரண்டொரு நாள்களில் பட்டுவாடா: இதனிடையே நிவாரணத்தொகை வழங்கப்படாதது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி கூறியது:
முதன்முதலாக நிவாரணத் தொகை ரூ.500 வழங்கியது தி.மு.க அரசுதான். விலைவாசியைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு மானியக்கோரிக்கையின்போது இந்த தொகை ரூ.800 ஆக உயர்த்தப்
பட்டது.
இந்தப் பணத்தை காசோலை மூலம் கடந்த ஆண்டு வழங்கினோம். இதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக மீனவர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதனால் இந்த ஆண்டு ரொக்கமாக வழங்க முடிவு செய்துள்ளோம்.
இது தொடர்பான நிதி அமைச்சக ஒப்புதல், அரசாணை போன்ற காரணங்களால் நிவாரணத்தொகை வழங்குவது சற்று தாமதமாகி விட்டது.
ஆனால் தற்போது அனைத்து பணிகளும் முடிந்து விட்டன. சுமார் 2 லட்சம் மீனவ குடும்பங்கள் பயன் பெறும் வகையில் சுமார் ரூ.16 கோடி நிவாரணத்தொகை இன்னும் இரண்டொரு நாள்களில் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் மூலம் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை நிச்சயம் பட்டுவாடா துவங்கும். வரும் ஆண்டுகளில் குறித்த காலத்திற்குள் வழங்குவதில் தாமதம் ஏற்படாது என்றார் அமைச்சர் சாமி.