துறைமுக இணைப்பு சாலைகள் திட்டம்: 267 கோடிக்கு டெண்டர் அறிவிப்பு
திருவொற்றியூர்: சென்னை-எண்ணூர் துறைமுகங்களை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் மணலி-எண்ணூர் சாலை மேம்பாட்டுத் திட்டம் (எம்ரிப்) தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென ரத்து செய்யப்பட்ட
சென்னைதுறைமுக இணைப்பு சாலைகள் திட்டம்: 267 கோடிக்கு டெண்டர் அறிவிப்பு
திருவொற்றியூர்: சென்னை-எண்ணூர் துறைமுகங்களை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் மணலி-எண்ணூர் சாலை மேம்பாட்டுத் திட்டம் (எம்ரிப்) தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென ரத்து செய்யப்பட்ட
திருவொற்றியூர்: சென்னை-எண்ணூர் துறைமுகங்களை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் மணலி-எண்ணூர் சாலை மேம்பாட்டுத் திட்டம் (எம்ரிப்) தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் கடந்த ஆகஸ்டு மாதம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் திங்கள்கிழமை அத்திட்டத்துக்கு 267 கோடியில் மீண்டும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதன்மூலம் நீண்ட காலமாக இத்திட்டத்தில் நிலவி வந்த தேக்கநிலையில் மீண்டும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் கன்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. தினமும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களால் ஏற்படும் சாலை விபத்துகளில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் பொன்னேரி நெடுஞ்சாலை, உள்வட்டச்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, எண்ணூர் விரைவு சாலை உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டம் அறிவிக்கப்பட்டது. 329 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டத்திற்கு கடந்த 2005, செப்டம்பர் 14-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 2007-ல் முடிக்கப்பட்டிருக்க வேண்டிய இத்திட்டம் 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தாமதத்திற்கு காரணம்:
நில ஆர்ஜிதம், மறுவாழ்வுப் பணிகள், நிதி ஒதுக்கீடு போன்ற காரணங்களால் இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதனால் திட்ட மதிப்பீடு 600 கோடியாக உயர்ந்தது. சென்னை துறைமுக நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இடையே போதிய ஒத்துழைப்பு இல்லாததால் 2008-ல் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த கடந்த ஜூன் 2010-ல் மீண்டும் டெண்டர் விடப்பட்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் ரத்து செய்யப்பட்டது.
கப்பல்துறை ஒப்புதல் கடிதம்:
இத்திட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் துறைமுகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து இத்திட்டத்தை நிறைவேற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் உறுதி அளித்தார்.
இந்த நிலையில் கடந்த செப்.8-ல் இத்திட்டத்திற்கு நிதி அளிக்க ஒப்புதல் தெரிவித்து சென்னை துறைமுகம் கடிதம் அளித்தது. மேலும் திட்ட மதிப்பீடு உயர்வுக்கான காரணத்தை நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், அமைச்சரவை குழுவிடம் அளிக்கும் என அறிவிக்கப்பட்டது.
இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
புதிய ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிப்பு:
இதன் தொடர்ச்சியாக துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டத்தின் ஒரு பகுதியாக சாலைகள் பணிகளுக்கு 267 கோடியில் திங்கள்கிழமை டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி எண்ணூர் விரைவு சாலை, மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பொன்னேரி நெடுஞ்சாலை, மாதவரம் உள்வட்டச் சாலை ஆகிய சாலைகளை சர்வீஸ் சாலைகளுடன் கூடிய நான்கு வழிச்சாலை அமைக்க திட்ட விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. தகுதி மற்றும் விலைப்புள்ளிகளை ஒரே நேரத்தில் அளிக்கும் வகையில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. நவம்பர் 25 -ல் டெண்டர் திறக்கப்பட்டு ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
வடசென்னை மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
வடசென்னையில் துறைமுகத்திற்கு வந்து செல்லும் லாரிகளால் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் போடப்பட்ட இத்திட்டம் நீண்ட நாள்களாக கிடப்பில் இருந்து வருகிறது. இரண்டு முறை டெண்டர் ரத்து செய்யப்பட்ட நிலையில்,
இந்த முறையாவது அறிவிக்கப்பட்டபடி திட்டம் நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் வட சென்னை மக்கள் உள்ளனர்.