முகப்பு
சென்னை

சமையல் எரிவாயு சிண்டர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன?

சென்னை, ஏப். 5: தமிழகத்தின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு எண்ணெய் நிறுவனங்கள் காரணமா அல்லது விநியோகஸ்தர்கள் காரணமா எனத் தெரியாத நிலையில் மக்கள் சிரமப்படுகின்

சென்னை

சமையல் எரிவாயு சிண்டர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்ன?

சென்னை, ஏப். 5: தமிழகத்தின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு எண்ணெய் நிறுவனங்கள் காரணமா அல்லது விநியோகஸ்தர்கள் காரணமா எனத் தெரியாத நிலையில் மக்கள் சிரமப்படுகின்

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

சென்னை, ஏப். 5: தமிழகத்தின் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கு எண்ணெய் நிறுவனங்கள் காரணமா அல்லது விநியோகஸ்தர்கள் காரணமா எனத் தெரியாத நிலையில் மக்கள் சிரமப்படுகின்றனர்.

முன்பெல்லாம் பதிவு செய்த 10 நாள்களுக்குள் வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது பல பகுதிகளில் 40 நாள்களைக் கடந்த பிறகுதான் சிலிண்டர் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

விலை வித்தியாசம்: சென்னை மாநகரில் வீடுகளுக்கு வழங்கப்படும் 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.404. அதே நேரத்தில் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.1,690.

இவ்வாறு விலை வித்தியாசம் இருப்பதால், வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களை பலர் முறைகேடான வழிகளில் வணிக நிறுவனங்களுக்கு விற்று விடுகின்றனர்.

இதற்கு சில விநியோகஸ்தர்களும், ஏஜென்சி ஊழியர்களும் துணைபோவதாகவும், இதனால்தான் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.

எண்ணெய் நிறுவனங்களே காரணம்: எரிவாயு தட்டுப்பாட்டுக்கு எண்ணெய் நிறுவனங்கள்தான் காரணம் என்கின்றனர் சில விநியோகஸ்தர்கள். இது பற்றி சென்னையைச் சேர்ந்த விநியோகஸ்தர் ஒருவர் கூறியதாவது:

கோடை காலத்தில் இந்த அளவுக்கு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறை. வீடுகளுக்கு மானிய விலையில் எரிவாயு வழங்குவதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படுகிறது. இந்தச் சூழலில் சிலிண்டர் விநியோகம் குறைந்தால் அதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டமும் தானாகவே குறையும். ஆகவே, திட்டமிட்டே விநியோகம் செய்யப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்து வருகின்றன.

எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஆகியோரின் பிரச்னைகளுக்குத் தொடக்கத்திலேயே தீர்வு காணாமல், வேலைநிறுத்தம் வரை பிரச்னையை கொண்டு செல்கின்றனர். பின்னர் அதனையே காரணம் காட்டி எரிவாயு விநியோகத்தைக் குறைத்து விடுகின்றனர். எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் மார்ச் 9-ம் தேதி முடிவடைந்தது. எனினும், இதுவரை எரிவாயு சிலிண்டர் விநியோகம் சீராகவில்லை.

அதேபோல தமிழகத்தில் பல லட்சம் இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் எரிவாயு தேவை அதிகரித்துள்ளது. ஆனால், தேவைக்கேற்ப எரிவாயு உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை. இதுவும் தட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணம் என்கிறார் அந்த விநியோகஸ்தர்.

எண்ணெய் நிறுவனங்கள் மறுப்பு: எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மறுக்கின்றனர். 2015-ம் ஆண்டுக்குள் நாட்டின் 75 சதவீத குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஆகவே, எரிவாயு தட்டுப்பாட்டை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டு ஏற்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை.

கடந்த மூன்று மாதங்களில் சுமார் 20 நாள்கள் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சிலிண்டர்களில் எரிவாயுவை நிரப்பும் மையங்களுக்கு எரிவாயுவை எடுத்துச் செல்லும் பணி முற்றிலும் தடைபட்டது. இதுதான் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்குக் காரணம்.

எனினும், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் விரைவில் இயல்பு நிலை ஏற்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

÷காரணம் எதுவாக இருந்தாலும், அவற்றையெல்லாம் சரிசெய்து சமையல் எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடின்றிக் கிடைக்கச் செய்ய மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →