முகப்பு
சென்னை

"மெட்ரோ ரயில் நிலையப் பணிகள் அடுத்த ஆண்டு ஜூனில் நிறைவடையும்'

சென்னை, ஜூன் 1: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையும் என்று மெட்ரோ ரயில் திட்ட உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ச

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:35 PM
பகிர்:

சென்னை, ஜூன் 1: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அருகே மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நிறைவடையும் என்று மெட்ரோ ரயில் திட்ட உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் ரூ.48 கோடியில் அமைக்கப்பட உள்ள இந்த ரயில் நிலையப் பணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விமான நிலைய ஆணையத்துக்கும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ளது.

இந்த மெட்ரோ ரயில் நிலையம், 17,300 சதுர மீட்டரில் ஐந்து மாடிகளுடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

கீழ் தளம் மற்றும் தரை தளம், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை பார்க்கிங் செய்ய பயன்படுத்தப்படும். முதல் தளத்தில் மெட்ரோ ரயில் நிலையம் செல்வதற்கான வழியும், 2-வது தளம் டிக்கெட் வாங்கவும், 3-வது தளம் ரயில் நிற்கும் இடம் என 5 தளங்கள் இருக்கும். விமான நிலையத்தில் கட்டப்பட உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் மாதிரி வடிவமைப்பை விமான நிலைய ஆணையம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

ரயில் நிலையத்தை அமைக்கும் பணி, யுஆர்சி கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டு வழித்தடங்களில் அமைக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

முதல் வழித்தடம், வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை 23 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. இரண்டாவது வழித்தடம், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 22 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரையிலான 12.3 கி.மீ. தூரம் மேம்பாலப் பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. இவ்வழித்தடத்தில் 2013-ம் ஆண்டு இறுதியில் மெட்ரோ ரயில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவு: மீனம்பாக்கம் விமான நிலையப் பகுதிகள் தவிர, மற்ற இடங்களில் தூண்கள் மற்றும் தூண்களுக்கு இடையே அமைக்கப்படும் சிமெண்ட் சிலாப்கள் அமைக்கும் பணிகள் பெருமளவு முடிந்து விட்டன.

கோயம்பேடு - பரங்கிமலை இடையே 17 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறன. தற்போது ரயில் நிலைய கட்டுமான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments