"தொடர் வெற்றிக்கு விடாமுயற்சியும் கடின உழைப்பும் அவசியம்'
வாழ்வில் பல்வேறு சோதனைகளையும், சவால்களையும் சமாளித்து போராடிப் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள விடாமுயற்சியும் கடின உழைப்பும் அவசியம் என்று இன்போசிஸ் துணைத் தலைவர் தோத்தாத்ரி விஸ்வநாதன் கூறினார்.

ரத்னமங்கலம் தாகூர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியது:
இன்றைய இளைஞர்களிடம் எளிதில் திருத்தி அமைத்துக் கொள்ளக் கூடிய குறைபாடுகள் உள்ளன. குறுக்கு வழியில் சாதித்துவிட வேண்டும் என்ற மனோபாவம் முன்னேற்றத்துக்கு தடைக்கற்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அனைத்துத் துறைகளிலும் புதிய சிந்தனையுடன், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் திறன் மிகுந்தவர்கள்தான் தலைமைப் பொறுப்பேற்கும் தகுதியைப் பெறுகின்றனர் என்றார். விழாவில் 527 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லூரித் தலைவர் பேராசிரியர் ஜெ.மாலா, முதல்வர் பி.காசிநாத பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement