முகப்பு
சென்னை

குவிகிறது நிவாரணப் பொருள்கள்; முறையாக விநியோகிக்கப்படுமா?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் குவிந்தவண்ணம் உள்ளன. ஆனால், இவற்றை தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க, உதவிட முன்வரும் பல்வேறு அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்றே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை

குவிகிறது நிவாரணப் பொருள்கள்; முறையாக விநியோகிக்கப்படுமா?

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் குவிந்தவண்ணம் உள்ளன. ஆனால், இவற்றை தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க, உதவிட முன்வரும் பல்வேறு அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்றே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:43 AM
பகிர்:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் குவிந்தவண்ணம் உள்ளன. ஆனால், இவற்றை தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க, உதவிட முன்வரும் பல்வேறு அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும் என்றே சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, புறநகர், கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களைத் தவிர உள்மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பு அதிக அளவில் இல்லை. ஆனால், சென்னையில் மாநிலம் முழுவதும் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்து வந்து குடியேறிவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.

உதவி வரும் உள்ளங்கள்: எனவே, சென்னை மாநகரவாழ் மக்களின் துயர் துடைப்பதில் தமிழகம் முழுவதும் உள்ளோர் உதவி புரிந்துவருகின்றனர். இதுதவிர, ஒரிஸா, பிகார் உள்ளிட்ட பிற மாநில முதல்வர்களும் தலா ரூ.5 கோடி நிதியுதவியை அளித்துள்ளனர். நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் உள்ளோரும் உதவிட முன்வருகின்றனர்.

வெள்ள நீரின் தாண்டவம் உச்சத்தில் இருந்தபோது தொலைபேசி, அலைபேசி உள்ளிட்டவை செயலிழந்தன. இருப்பினும் வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் வாயிலாக பல்வேறு தரப்பினரும் தாங்கள் ஏற்பாடு செய்து வைத்துள்ள உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்டு விநியோகிக்க வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

தொண்டு நிறுவனங்களை மிஞ்சிய பொதுநல ஆர்வலர்கள்: முன்பெல்லாம் ஏதேனும் பாதிப்பு எனில் நிவாரணப் பணிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கும். இப்போது பாதிக்கப்பட்டோரை மீட்டெடுப்பதில் தனிநபர்கள் கூட தாங்களாகவே சிறு சிறு குழுக்களை ஏற்படுத்திக் கொண்டு நிவாரண உதவிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரணப் பொருள்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் இவற்றை விநியோகம் செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என பாதிக்கப்பட்டோரில் பலர் புகார் தெரிவிக்கின்றனர்.

ஒரு லட்சம் சப்பாத்திகள் எங்கே?: இந்த நிலையில், பெங்களூருவிலிருந்தும், கோவையிலிருந்தும் தலா ஒரு லட்சம் சப்பாத்திகள் வருகின்றன என்ற தகவல்கள் வந்தன. இவை எங்கு கொண்டு செல்லப்பட்டன, எவ்வாறு விநியோகம் செய்யப்பட்டன என்பது குறித்து இப்பணியில் ஈடுபட்டுள்ள உயர் அதிகாரிகளுக்குக் கூட தெரியவில்லை.

முறையாக விநியோகிக்க நடவடிக்கை தேவை: இதனால், வெள்ள நிவாரணப் பொருள்களை வழங்கிட முன்வருவோரை ஒருங்கிணைத்து, அவற்றை பாதிக்கப்பட்டோருக்கு முறையாக விநியோகிக்க அரசுத் துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து குழு அமைக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடைகளில் வாங்கும் வசதி இல்லாத ஏழைகளுக்கு அனைத்து அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய நிவாரண மூட்டைகளை இலவசமாக வழங்க வேண்டும். இவர்களுக்கு பணமாகக் கொடுப்பதைவிட இது போன்று நிவாரணப் பொருள்களை அளிப்பது சிறப்பாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய வீடு போல குடியேற வேண்டிய நிலை..!

சென்னை, புறநகர் பகுதிகளில் அதிக அளவிலான அடுக்கு மாடு வீடுகளில் தரைத்தளத்தில் வசித்தவர்களின் அத்தியாவசியப் பொருள்கள், உடைகள், மின்சாதனப் பொருள்கள் உள்ளிட்ட அனைத்தும் சேதமடைந்து விட்டன. குடிசைவாசிகளைப் பொருத்தவரை சேதம் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

மழை சற்று ஓய்ந்ததையடுத்து படிப்படியாக இனிமேல்தான் வெள்ளச் சேதம் முழுமையாகத் தெரியவரும். வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் மீண்டும் இயல்பு வாழ்க்கையைத் தொடர வேண்டும் எனில் ஒரு புதிய வீட்டில் குடியேறினால் என்ன தேவையோ அத்தனை பொருள்களையும் உடனடியாக வாங்கியாக வேண்டிய கட்டாயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர்.

வியாபாரிகளுக்கும் உதவ வேண்டும்..!

வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிக அளவில் விற்கப்பட்டன. இதேபோல், ஆட்டோ, கால் டாக்சிகள், கார்கள் உள்ளிட்டவற்றின் கட்டணங்களும் கடுமையாக அதிகரிக்கப்பட்டன.

இதுகுறித்து சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஜெயகுமார் கூறியதாவது: உணவுப் பொட்டலங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், ரொட்டி பாக்கெட்டுகள், ஆடைகள், போர்வைகள், கொசுவத்திச் சுருள்கள், பிஸ்கெட்டுகள், மருந்து பொருள்கள், பாட்டில்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், சோப்பு, சலவை பவுடர்கள் உள்ளிட்டவையே பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய தேவையாக உள்ளன.

இவற்றை தட்டுப்பாடின்றி இருப்பு வைக்க வியாபாரிகளை அரசு அறிவுறுத்த வேண்டும். மேலும், இந்தப் பொருள்களை கொள்முதல் செய்து சென்னைக்கு கொண்டு வந்து சேர்ப்பதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை வியாபாரிகளுக்கு உடனடியாக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →