முகப்பு
போக்குவரத்து முறையாகக் கட்டுப்படுத்தப்படாததால் சென்னைத் துறைமுகத்தின் உள்ளே வரிசையாக நிற்கும் கண்டெய்னர் லாரிகள்.
சென்னை

தேக்கநிலையில் சிக்கித் தவிக்கும் சென்னைத் துறைமுகம் : புதிய துறைமுகத் தலைவருக்கு காத்திருக்கும் சவால்கள்

பல்வேறு பிரச்னைகளால் தொடர்ந்து சில ஆண்டுகளாக தேக்கநிலையில் இருந்து வரும் சென்னைத் துறைமுகத்தை சீரமைக்க

சென்னை

தேக்கநிலையில் சிக்கித் தவிக்கும் சென்னைத் துறைமுகம் : புதிய துறைமுகத் தலைவருக்கு காத்திருக்கும் சவால்கள்

பல்வேறு பிரச்னைகளால் தொடர்ந்து சில ஆண்டுகளாக தேக்கநிலையில் இருந்து வரும் சென்னைத் துறைமுகத்தை சீரமைக்க

Updated On : 24 ஜனவரி, 2024 at 6:27 PM
போக்குவரத்து முறையாகக் கட்டுப்படுத்தப்படாததால் சென்னைத் துறைமுகத்தின் உள்ளே வரிசையாக நிற்கும் கண்டெய்னர் லாரிகள்.
பகிர்:

பல்வேறு பிரச்னைகளால் தொடர்ந்து சில ஆண்டுகளாக தேக்கநிலையில் இருந்து வரும் சென்னைத் துறைமுகத்தை சீரமைக்க புதிய துறைமுகத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பி.ரவீந்திரன் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னைத் துறைமுக புதிய தலைவராக காஞ்சிபுரம் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ரயில்வே போக்குவரத்து பிரிவு குடிமைப் பணி அதிகாரியான பி.ரவீந்திரன் சமீபத்தில் பொறுப்பேற்றுள்ளார். இவர் ஐந்தாண்டுகளுக்கு இப்பதவியில் இருப்பார். இந்நிலையில் துறைமுகத்தைச் சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துறைத் தலைவர் பதவிகள் காலி:
துறைமுகத் தலைவருக்கு உதவிகரமாகச் செயல்பட வேண்டிய முக்கியத் துறைகளின் தலைவர் பதவிகள் நீண்ட நாள்களாகக் காலியாகவே உள்ளன. நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி, தலைமை மருத்துவ அதிகாரி, போக்குவரத்து மேலாளர், கடல்சார் துணை பாதுகாவலர், தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட பதவிகளில் தற்போது பொறுப்பு அதிகாரிகளே உள்ளனர். இவர்களால் எவ்வித உறுதியான முடிவுகளையும் எடுக்க முடிவதில்லை எனக் கூறப்படுகிறது.

நிர்வாகத்தில் நேரடியாகத் தொடர்புடைய இந்த அதிகாரிகளை நியமனம் செய்வதில் புதிய தலைவர் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல்: துறைமுகத்தின் வளர்ச்சியைப் பெருமளவு பாதிப்பது கண்டெய்னர் போக்குவரத்து நெரிசல்தான். ஆனால் இப்பிரச்னையின் தீவிரத்தன்மையைக் குறைக்க நீóண்ட காலமாகவே எந்த அதிகாரியும் முழுமையாக ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஒவ்வொரு திங்கள்கிழமையும் காலியாக இருக்கும் துறைமுகம் அடுத்தடுத்த நாள்களில் நிரம்பி வழிவதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்தால் புதிய தலைவருக்கு இதில் தீர்வு கிட்டுவதில் சிக்கல் ஏதும் இருக்காது. காலியாக வரும் வாகனங்களை நிறுத்தி வைக்க போதிய இடவசதியை ஏற்படுத்தி, உள்ளே, வெளியே செல்லும் வாகனங்களை ஒழுங்குபடுத்தி, இங்குள்ள தனியார் சரக்குப் பெட்டக முனையங்களின் செயல்பாடுகளை துறைமுகத்தலைவர் கண்காணிக்க வேண்டும். இப்பிரச்னை ஒன்றுக்கு தீர்வு கண்டாலே துறைமுகத்தின் வளர்ச்சிப் பாதைக்கான கதவு மீண்டும் திறக்கப்படும் என்கின்றனர் துறைமுக ஊழியர்கள்.

தனியார் துறைமுகங்களின் போட்டி: சென்னைக்கு அருகே அதானி காட்டுப்பள்ளி, கிருஷ்ணபட்டனம், காரைக்கால் துறைமுகம் உள்ளிட்ட தனியார் துறைமுகங்கள் சமீபகாலமாக பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளன. மேலும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் மிகப்பெரிய சரக்குப் பெட்டக முனையம் சுமார் ரூ.1,800 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவைகளின் ஏறுமுகம் என்பது சென்னைத் துறைமுகத்தின் இறங்குமுகத்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள்: துறைமுகத்தில் நிலவும் நெரிசலைக் கருத்தில் கொண்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். மூடிக்கிடக்கும் பாதிக்கும் மேற்பட்ட நுழைவு வாயில்களை வாகனப் போக்குவரத்துக்கு திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கார் ஏற்றுமதிக்காக வரும் லாரிகள் திரும்பிச் செல்ல இரு நாள்களாகின்றன. இதே நிலைதான் இரும்புத் தகடு, கிராணைட் கற்கள் ஏற்றிவரும் லாரிகளுக்கும் இருந்து வருகிறது.

சென்னைக்கு அருகே மணலியில் ஒரு சரக்குப் பெட்டக முனையத்தை ஏற்படுத்தி அதிகமான கண்டெய்னர்களை சரக்கு ரயில்கள் மூலம் எடுத்துச் செல்லும் திட்டம் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். இதன்மூலம் லாரிகள் மூலம் ஏற்படும் நெரிசல் குறையும். மேலும் துறைமுகத்தின் உள்ளே இரண்டு அல்லது மூன்று இடங்களில் மேம்பாலம் அமைப்பதால் போக்குவரத்து தடையின்றி நடைபெற ஏதுவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் நிலக்கரி, இரும்புத்தாது கையாள்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் இதனால் ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்க மாற்றுத் திட்டம் எதனையும் துறைமுக நிர்வாகம் இன்றுவரை செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே புதிய தலைவர் இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்து முக்கிய வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர் பிரச்னைகள்

சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றிய சென்னைத் துறைமுகத்தில் தற்போது சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். சரக்குப் பெட்டகங்களைக் கையாள்வதில் தனியார் நிறுவனங்கள், நிலக்கரி, இரும்புத்தாது கையாள்வதில் தடை போன்றவைகளால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித பணிகளும் இல்லை. இவர்களின் வருகையை உறுதி செய்ய சமீபத்தில்தான் டிஜிட்டல் வருகைப் பதிவேடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமே போதுமானதல்ல. வேலைக்கு வரும் தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறித்து எவ்வித அளவீடுகளும் இல்லை. மேலும் கூடுதலாக இருக்கும் தொழிலாளர்களை மாற்றுப்பணியில் ஈடுபடுத்துவதில் தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்போடு முனைப்பு காட்ட வேண்டும்.

இது தவிர ஸ்ரீபெரும்புதூர் உலர் துறைமுகத் திட்டம், திருவொற்றியூரில் வாகன நிறுத்த முனையம், காற்றாலை மின் திட்டங்கள், உள்நாட்டு கடலோர சரக்குப் போக்குவரத்து, மின்னொளி கூட்டுதல், பல்லடுக்கு கார் நிறுத்த முனையம், பயணிகள் முனையம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிலுவையிலும், மந்த கதியிலும் உள்ளன.

இவையெல்லாம் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள துறைமுகத் தலைவர் பி.ரவீந்திரனுக்கு சவாலாக உள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →