சென்னை

ரஷிய நாட்டு சுற்றுலாப் பயணியிடம் வழிப்பறி

DIN

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் ரஷிய நாட்டு சுற்றுலாப் பயணியிடம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
ரஷிய நாட்டைச் சேர்ந்தவர் சர்ஜிகோபு (35). இவர், தமிழகத்தை சுற்றிப் பார்க்க சில நாள்களுக்கு முன்பு சென்னை வந்தார். சர்ஜி, வெள்ளிக்கிழமை இரவு, கிழக்கு கடற்கரைச் சாலையில் அக்கரையில் உள்ள இஸ்கான் கோயிலுக்கு செல்வதற்காக பேருந்து மூலம் அக்கரை பேருந்து நிலையத்துக்கு வந்தார்.
அங்கிருந்து கிழக்கு கடற்கரைச் சாலையில் கோயிலை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள், சர்ஜி கையில் வைத்திருந்த பையை பறித்துச் சென்றனர்.
அவர்களை பையைப் பறித்தபோது சர்ஜி, அவர்களை பிடிக்க முயன்றார். ஆனால் அந்த நபர்கள் தப்பியோடிவிட்டனர். அந்த பையில் அவர், 50 அமெரிக்க டாலர், கேமரா,ஐ-பேடு, செல்லிடப்பேசி ஆகியவற்றை வைத்திருந்தார்.
இது குறித்து அவர், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT