சென்னை

தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத் தேர்தல் முடிவு நீதிமன்றத்தில் தாக்கல்

DIN

தமிழ்நாடு அரசு செவிலியர் சங்க நிர்வாகிகள் தேர்தல் முடிவுகளை நீதிமன்றம் நியமித்த வழக்குரைஞர் ஆணையர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசு செலிவியர் சங்கத் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாமல் இருந்தன. தேர்தல் முடிவுகளை வெளியிடுமாறு கோரி செவிலியர்கள் வளர்மதி மற்றும் காளியம்மாள் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு, தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இந்தப் பணிகளை மேற்கொள்ள வழக்குரைஞர் ஜெயேஷ் பி.டோலியாவை வழக்குரைஞர் ஆணையராக நீதிபதிகள் நியமித்தனர்.
அந்த தாக்கல் செய்த அறிக்கையில், தலைவராக கே.சக்திவேல், செயலாளராக வளர்மதி, உதவி செயலாளர்களாக ஜெயபாரதி, ஜீவா ஸ்டாலின், பொருளாளர்களாக காளியம்மாள், கீதா,13 துணைத்க்ஷி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT