சென்னை

குப்பை சேகரிக்கும் இளைஞர்கள்: மெத்தனம் காட்டும் மாநகராட்சி

DIN

கடற்கரையில் குப்பைகளை தன்னார்வ இளைஞர்களே முறையாக சேகரித்து ஒழுங்குப்படுத்தி வைக்கின்றனர். இவற்றை அப்புறப்படுத்துவதில் சென்னை மாநககராட்சி தாமதமப்படுத்துகிறது. இதனால், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

லட்சக்கணக்கானோர் கூடியுள்ள இடத்தில் அதற்கேற்ப கூடுதலான குப்பைத் தொட்டிகள் வைத்திருக்க வேண்டும். ஆனால், போராட்டத்துக்கு முன்பு எவ்வளவு குப்பைத் தொட்டிகள் இருந்ததோ, அதே அளவில்தான் உள்ளன.
போராட்டக்காரர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க நடமாடும் உலர் கழிவறைகளை தொண்டு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் கொண்டு வந்தனர். ஆனால், "நம்ம டாய்லெட்' என பெயரிடப்பட்டுள்ள நடமாடும் உலர் கழிவறைகளை பெயரளவில் கூட பெருநகர சென்னை மாநகராட்சி ஏற்படுத்தி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிகட்டுக்காக மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களால் சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT