சென்னை

காலிப் பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம்: பணிச்சுமையில் தவிக்கும் சத்துணவு ஊழியர்கள்

DIN

காலிப் பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் தொடர்வதால், சத்துணவு ஊழியர்கள் பணிச்சுமைக்கு ஆளாகி வருகின்றனர். பணியிடங்களை விரைந்து நிரப்புமாறு சத்துணவு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் சத்துணவு வழங்குவதற்காக, தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் 42,423 சத்துணவுப் அமைப்பாளர்கள், 42,855 சமையல் உதவியாளர்கள், 42,855 சமையலர்கள் உள்பட மொத்தம் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 132 பணியிடங்கள் உள்ளன. இதில், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருந்து வந்தன.
இப்பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில், நியமன குழு அமைக்கப்பட்டது. ஆனாலும், பணியிடங்களை நிரப்புவது தொடர்ந்து தாமதிக்கப்படுவதாக சத்துணவு ஊழியர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதுகுறித்து சத்துணவு ஊழியர்கள் சங்க அமைப்பினர் கூறியதாவது: சத்துணவு ஊழியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அதன் பிறகும், ஒரு சில மாவட்டங்களைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன.
தடை நீங்கியது: இந்நிலையில், கடந்த ஆண்டில் சமையலர் பணியிட நியமனத்துக்கு நீதிமன்றத்தில் தடையாணை இருந்து வந்தது. இதையடுத்து சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணியிடங்கள் மட்டும் மாவட்ட ஆட்சியர் நியமனக் குழு மூலம் நிரப்பப்பட்டு வந்தன. இதற்கிடையில், சமையலர் பணியிடங்களை நிரப்புவதில் இருந்த தடையை நீக்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து தாமதம்: அத்துடன் சமையலர் பணியிலிருப்போரை, பதவி உயர்வு மூலம் சத்துணவு அமைப்பாளராக நியமிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இதுவரை சத்துணவு ஊழியர்களின் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
மூன்றில் ஒருவர்: சத்துணவு பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் தொடர்வதால், பல்வேறு சத்துணவு கூடங்களில் ஊழியர்கள் பணிச்சுமையை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், சத்துணவு அமைப்பாளர் இருந்தால் சமையலர் இல்லாமல் இருப்பதும், சமையலர் இருந்தால் சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் இல்லாததால் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குதில் தாங்கள் அவ்வப்போது சிரமத்தை சந்திப்பதாக சத்துணவு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர் கோரிக்கை: அதுபோல், சிறப்பு காலமுறை ஊதிய முறையை மாற்றி, காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். குடும்ப பாதுகாப்புடன்கூடிய மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியின்போது இறந்த சத்துணவு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றனர் அவர்கள்.
மூன்றில் ஒருவர்!
த்துணவு பணியிடங்களை நிரப்புவதில் தாமதமாகி வருவதால் பல்வேறு சத்துணவு கூடங்களில் ஊழியர்கள் பணிச்சுமையை சந்தித்துவருகின்றனர். இந்நிலையில், சத்துணவு அமைப்பாளர் இருந்தால் சமையலர் இல்லாமல் இருப்பதும், சமையலர் இருந்தால் சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் இல்லாதது உள்ளிட்ட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு சத்துணவு வழங்குதில் ஊழியர்கள் அவ்வப்போது சிரமத்தை சந்திப்பதாக சத்துணவு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளை பறிகொடுத்தேன்” -பெற்றோர் குமுறல்

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

SCROLL FOR NEXT