சென்னை

சிவில் சர்வீஸ் தேர்வு: மெட்ரோ ரயில் இன்று காலை 6 மணி முதல் இயக்கம்

DIN

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு வசதியாக காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற ஆட்சிப் பணிக்கான முதன்மை எழுத்து தேர்வு ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 72 நகரங்களில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது.
சென்னையில் செனாய் நகரில் இருந்து பரங்கிமலை வரையும், சின்னமலையில் இருந்து விமான நிலையம் வரையும் மெட்ரோ ரயில் சேவை உள்ளது.
பொதுவாக வார விடுமுறை நாள்களில் வழக்கமாக காலை 8 மணி முதல்தான் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெறுவதால் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் காலை 6 மணி முதலாகவே இயக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT