முகப்பு
சென்னை

வடசென்னை பகுதியில் குறைந்து வரும் நிலத்தடி நீர் வளம்: ஆழப்படுத்தப்படுமா மணலி மாத்தூர் ஏரி?

வடசென்னையில் குறைந்து வரும் நிலத்தடி நீர்வளத்தைக் காப்பாற்ற, மணலி மாத்தூர் ஏரியைத் தூர்வாரி, ஆழப்படுத்தி சீரமைக்க தமிழக பொதுப்பணித் துறை உடனடியாக நடவடிக்கை

சென்னை

வடசென்னை பகுதியில் குறைந்து வரும் நிலத்தடி நீர் வளம்: ஆழப்படுத்தப்படுமா மணலி மாத்தூர் ஏரி?

வடசென்னையில் குறைந்து வரும் நிலத்தடி நீர்வளத்தைக் காப்பாற்ற, மணலி மாத்தூர் ஏரியைத் தூர்வாரி, ஆழப்படுத்தி சீரமைக்க தமிழக பொதுப்பணித் துறை உடனடியாக நடவடிக்கை

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:32 PM
பகிர்:

வடசென்னையில் குறைந்து வரும் நிலத்தடி நீர்வளத்தைக் காப்பாற்ற, மணலி மாத்தூர் ஏரியைத் தூர்வாரி, ஆழப்படுத்தி சீரமைக்க தமிழக பொதுப்பணித் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

கடந்த 2015 -இல் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகள் தற்போது குடிநீருக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. கோடை மழை பெய்யவில்லை எனில் தண்ணீர் தட்டுப்பாட்டின் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில், சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய ஏரிகளைத் தூர்வாரி சீரமைத்தால் இந்த ஆண்டு பருவ காலத்தில் பெய்யும் மழையின்போது நீரைத் தேக்கி வைக்க முடியும். இதன் மூலம் நிலத்தடி நீராதாரத்தைக் காப்பாற்ற முடியும்.
குறையும் நிலத்தடி நீர்: வடசென்னை பகுதிகளில் மாதவரம், திருவொற்றியூர், மணலி, மாத்தூர் உள்ளிட்ட பகுதியில் பூமியில் எங்கு தோண்டினாலும் சில அடி தூரத்திலேயே சுவையான தண்ணீர் இருந்துள்ளது. கனரகத் தொழிற்சாலைகளின் வளர்ச்சி, மக்கள்தொகை பெருக்கம், ராட்சத மோட்டார்கள் மூலம் தொடர்ந்து நீரை உறிஞ்சி வந்தது போன்ற பல்வேறு காரணங்களால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
மேலும் ரசாயன ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், பக்கிங்காம் கால்வாயில் செல்லும் கழிவுநீர் போன்றவற்றாலும் நிலத்தடி நீர் இப்பகுதியில் தொடர்ந்து மாசடைந்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் சில இடங்களில் கடல் நீர் உட்புகுந்து உப்புநீராகவே மாறிவிட்டது. இதே நிலை தொடர்ந்தால் பெரும்பாலான பகுதிகளில் கடல்நீர் புகும் அபாயம் உள்ளது.
மணலி பகுதிகளில் சில இடங்களில் துர்நாற்றம் வீசும் அளவுக்கு நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. மாதவரம் பகுதியில் மட்டும்தான் ஓரளவுக்கு குடிநீராகப் பயன்படுத்தும் அளவுக்கு நிலத்தடி நீர் வளம் உள்ளது. எனவே, இப்பகுதியில் இருக்கும் நீர்வளத்தைக் காப்பாற்றவும், இழந்த நீர்வளத்தைப் பெருக்கவும் ஏரிகளைத் தூர்வாருவது அவசியமாகும்.
மூன்றில் ஒரு பங்கு காணாமல் போன மாத்தூர் ஏரி:
பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மணலி மாத்தூர் ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. புழல் ஏரி கால்வாயின் மிக அருகில் இந்த ஏரி அமைந்துள்ளது என்றாலும், வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலத்தில்கூட இங்கு தண்ணீர் வருவதற்கு வழியில்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இந்த ஏரியின் தெற்குப் பகுதி மாதவரம் பால்பண்ணை நிர்வாகம் வசம் உள்ளது. அவர்களும் ஏரியைத் தூர்வாருவது இல்லை. பழைமையான ஏரியான மாத்தூர் ஏரியின் தென்பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அரியவகை பறவையினங்கள் வசித்து வருகின்றன. தற்போது நீர் வற்றியதையடுத்து இப்பறவைகள் வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டன.
மொத்தப் பரப்பளவில் சுமார் 50 ஏக்கர் வரை ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் அமைக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள பகுதிகளில் வேலிக்காத்தான் மரங்கள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது.
எனவே, இந்த ஏரியை உடனடியாகச் சீரமைக்க வேண்டும். புழல் ஏரி கால்வாய் - மாத்தூர் ஏரி இடையே உள்ள இணைப்புக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் நான்கு புறமும் வலுவான கரைகளை அமைத்து எதிர்காலத்தில் யாரும் ஏரி நிலத்தை ஆக்கிரமிக்காமலிருக்கவும், எவ்விதத்திலும் கழிவுநீர் ஏரியில் கலக்காமல் இருக்கவும் வழிவகை காண வேண்டும். இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →