சென்னை

இணையதளம் மூலம் மீன் விற்பனை: அமைச்சர் தொடங்கி வைத்தார்

DIN

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் சார்பில் ஆன்லைன் மூலம் மீன் விற்பனை செய்யும் திட்டத்தை சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் வியாழக்கிழமை (மே 25) தொடங்கி வைத்தார்.
மீன் விற்பனைக்காக www. meengal.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் என்னென்ன மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
பின்னர் பின்கோடு எண்ணை தட்டச்சு செய்தால் அந்த பகுதியில் உள்ள கடைகளில் எவ்வளவு மீன்கள் இருப்பு உள்ளது என்பதையும் அறிந்து கொள்ள முடியும். அந்தந்த நாள் சந்தை நிலவரப்படி ஒரு கிலோ மீன் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும்.
மீன் வகை, எவ்வளவு தேவை என்பதை ஆர்டர் செய்தால் மீன் வீடு தேடி வரும். மீனுக்கு உரிய தொகையை பணமாகவும் கொடுக்கலாம். ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.
குறைந்தபட்சம் ரூ.500-க்கு மீன் வாங்க வேண்டும். தற்போது சென்னையில் மட்டும் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் அண்ணாநகர், நந்தனம், தேனாம்பேட்டை, சாந்தோம், சிட்லபாக்கம் ஆகிய ஸ்டால்களை சுற்றியிருக்கும் பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.
மீன்களை மோட்டார் சைக்கிளில் பதப்படுத்தும் பெட்டியில் வைத்து பாதுகாப்பாக கொண்டு வருவார்கள். தொலைவுக்கு ஏற்ப சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். சென்னை நகரம் முழுவதும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த மேலும் மீன் விற்பனை ஸ்டால்கள் திறக்கப்படவுள்ளன. வெட்டி, சுத்தப்படுத்திய துண்டு மீன்கள், முழு மீன்கள் என இரண்டும் விற்பனைக்கு உள்ளன. பொதுமக்கள் தங்களுக்கு தேவையானதை வாங்கி கொள்ள முடியும்.
இந்த நிகழ்ச்சியில் ஜெயவர்தன் எம்.பி., மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.நடராஜ், மீன்வளத் துறைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, இயக்குநர் பீலா ராஜேஷ், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT