சென்னை

ஓவியக் கல்லூரி மாணவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய அமைச்சர் உத்தரவு

DIN

அரசு ஓவியக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் உத்தரவிட்டார்.
சென்னை எழும்பூரில் 168 ஆண்டுகள் பாரம்பரியத்துடன் செயல்பட்டு வரும் அரசு கவின் கலைக் கல்லூரியை அமைச்சர் பாண்டியராஜன் அண்மையில் ஆய்வு செய்து, மாணவர்களை நேரடியாக வகுப்பறைகளில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். மாணவர்கள் தெரிவித்த குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தார். மேலும், வகுப்பு வாரியான ஆய்வுகளில் பாடத்திட்டங்கள், செயல்முறை வகுப்புகள், மாணவர்களுக்கான வேவை வாய்ப்புகள் குறித்து அனைத்து விளக்கங்களையும் கல்லூரி முதல்வர், ஆசிரியர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார். 
கல்லூரியின் எதிர்கால வளர்ச்சி, முன்னேற்றம் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான அறிவுரைகளையும் அவர் வழங்கினார். 
இந்த ஆய்வின்போது, கலை பண்பாட்டுத்துறை ஆணையர் எ.இராமலிங்கம், இணை இயக்குநர் பெருமாள், கல்லூரி முதல்வர் து.மதியழகன் ஆகியோர் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT