சென்னை

காலமானார் திருப்பனந்தாள் வி.சந்திரசேகர சிவாச்சாரியார்

DIN

பிரபல சம்ஸ்கிருத அறிஞரான தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் வி.சந்திரசேகர சிவாச்சாரியார் (92) உடல் நலக் குறைவு காரணமாக 'ஏ-2, ஆனந்தி அபார்ட்மென்ட், 33/17 சாலைத் தெரு, மயிலாப்பூர் (சித்திரக்குளம் அருகில்), சென்னை-4' என்ற முகவரியில் உள்ள இல்லத்தில் திங்கள்கிழமை (ஏப். 16) காலமானார்.
இவர் தருமபுர ஆதீன வேத பாடசாலையில் பயின்று 'ஆகமப் பிரவீண' பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் 'சாகித்ய சிரோமணி' பட்டமும் பெற்றவர். தருமபுர ஆதீனத்தில் சைவாகம ஆசிரியராகப் பணியாற்றிய அவர், பின்னர், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் தொடங்கப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத சாஸ்திர ஆகம வித்யா கேந்திரத்தில், சைவாகமப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 'சைவாகம ரத்னாகரம்', 'சைவ சித்தாந்த சரபம்' போன்ற பட்டங்களையும் பெற்றவர்.
இவருக்கு சென்னை தினமணியில் முதன்மை உதவி ஆசிரியராகப் பணியாற்றிய ராஜ் கண்ணன் உள்ளிட்ட மூன்று மகன்கள், இரு மகள்கள் உள்ளனர்.
அவருடைய இறுதிச் சடங்குகள் மயிலாப்பூர் மயானத்தில் (டிஜிபி அலுவலகம் பின்புறம்) செவ்வாய்க்கிழமை (ஏப். 17) பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகின்றன. தொடர்புக்கு 98840-06350.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT