சென்னை

அம்பேத்கர் இன்றும் என்றும்

DIN

இந்து மதத்தின் புதிர்கள், தீண்டாமை, பண்டைய இந்தியாவின் புரட்சி - எதிர் புரட்சி பற்றிய அம்பேத்கரின் முக்கியமான கட்டுரைகளை 50 தலைப்புகளில் மூன்று பகுதிகளாக கொண்டுள்ளது இப்புத்தகம். 
இந்துத்துவம், சாதி, பகுத்தறிவு, நாத்திகம் போன்றவை பற்றி அம்பேத்கர் எழுதியவற்றையும், மகாராஷ்டிர அரசால் 32 தொகுதிகளாக ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அம்பேத்கரின் எழுத்துகளை பலர் தமிழில் மொழிப்பெயர்த்துள்ளனர். 
அவற்றிலிருந்தும் சிலவற்றை தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் பொருளாதாரம், சமூகம் போன்றவற்றை வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூல் அமையப்பெற்றதும் தனிச்சிறப்பு.
ரூ.300 விலை கொண்ட இப்புத்தகம் புத்தகக் காட்சிக்காகக் கழிவுத் தொகை போக ரூ. 200- க்கு விற்கப்படுகிறது. சென்னை புத்தகக் காட்சியில் அதிகளவில் விற்கப்பட்ட புத்தகங்களில் 'அம்பேத்கர் இன்றும் என்றும்' புத்தகமும் ஒன்று. 3000 ஆயிரம் பிரதிகளில் தற்போது 300- க்கும் குறைவான பிரதிகள் மட்டுமே இருப்பதாக விடியல் பதிப்பகத்தார் தெரிவித்தனர். 
விடியல் பதிப்பகத்தின் வெளியீடாக 594 பக்கங்களைக் கொண்ட அம்பேத்கர் இன்றும் என்றும் புத்தகத்தை விடியல் பதிப்பகத்தினரே குழுவாக சேர்ந்து தொகுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT