சென்னை

மறுசீரமைக்கப்பட்ட டாக்டர் நடேசன், ஜீவா பூங்கா திறப்பு

DIN

சென்னை சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் ரூ.5.21 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட டாக்டர் நடேசன் பூங்கா மற்றும் ஜீவா பூங்காவை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் புதன்கிழமை திறந்து வைத்தனர்.
நடேசன் பூங்கா: சென்னை சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் தியாகராய நகர் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட , 14,766 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட டாக்டர் நடேசன் பூங்கா ரூ.3.54 கோடி மதிப்பீட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இப்பூங்காவில், பார்வையற்றோரும் பயன்படுத்தும் வகையில் நடைபாதை, சிறுவர் விளையாட்டுத் திடல், கிரானைட் இருக்கைகள், மின்வசதி, பசுமை புல் தரை, பாரம்பரிய மரக்கன்றுகள், நிழற்கூடாரம், செல்லிடப்பேசிக்கான சூரிய ஒளியில் இயங்கும் சார்ஜர்கள் ஆகிய வசதிகள் இடம்பெற்றுள்ளன. 
மேலும் திறந்தவெளி உடற்பயிற்சி தளம், கூழாங்கற்களிலான நடைபாதை, இயற்கை கருங்கல் நடைபாதை, செயற்கை நீருற்று, அலங்கார மின் விளக்குகள், இறகு பந்து மைதானம், புல்தரையுடன் கூடிய செயற்கை குன்று மற்றும் சிசிடிவி கேமரா ஆகிய வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பூங்காவில் 40 கிலோ லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதில் உருவாகும் கசடு செடிகளுக்கு உரமாக பயன்படுத்தப்படும். நடேசன் பூங்காவால் சுமார் 50,000 மக்கள் பயன்பெறுவர்.
ஜீவா பூங்கா: இதேபோன்று, கோபதி நாராயணா சாலையில் 4,782 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட ஜீவா பூங்கா ரூ.1.67 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பூங்காவில் 10 கிலோ லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவால் சுமார் 50,000 மக்கள் பயன்பெறுவர்.
விழாவில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ஜெயவர்த்தன், தியாகராய நகர் சட்டப் பேரவை பி.சத்தியநாராயணன் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT