சென்னை

பராமரிப்புப் பணி: கடற்கரை-வண்ணாரப்பேட்டை இடையே புறநகர் ரயில் சேவையில் இன்று மாற்றம்

தினமணி

சென்னை கடற்கரை-வண்ணாரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 22) புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 ஞாயிற்றுக்கிழமை முழுமையாக ரத்தாகும் புறநகர் ரயில்கள்: சென்னை கடற்கரை-திருவள்ளூருக்கு பகல் 1.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை-பட்டாபிராம் ராணுவ பகுதிக்கு பகல் 1.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மூர் மார்க்கெட்-திருவள்ளூருக்கு காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருவள்ளூர்-மூர்மார்க்கெட்டுக்கு பிற்பகல் 2.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருவள்ளூர்-சென்னை கடற்கரைக்கு காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.
 பகுதி ரத்தாகும் மின்சார ரயில்கள்: திருவள்ளூர்-சென்னை கடற்கரைக்கு பகல் 1.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி-சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருவள்ளூரில் இருந்து ஆவடி வரை மட்டும் இயக்கப்படும்.
 மூர் மார்க்கெட்டுக்கு மாற்றிவிடப்படும் ரயில்கள்: கடம்பத்தூர்-சென்னை கடற்கரைக்கு பகல் 12.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், வியாசர்பாடி ஜீவா-சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு, மூர் மார்க்கெட்டுக்கு திருப்பி விடப்படுகிறது.
 ஆவடி-சென்னை கடற்கரைக்கு பகல் 12.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் வியாசர்பாடி ஜீவா-சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு, மூர்மார்க்கெட்டுக்கு திருப்பி விடப்படுகிறது.
 ஆவடி-சென்னை கடற்கரைக்கு பிற்பகல் 2.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் வியாசர்பாடி ஜீவா-சென்னை கடற்கரைக்கு இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு, மூர் மார்க்கெட்டுக்குத் திருப்பிவிடப்படுகிறது.
 பயணிகள் சிறப்பு புறநகர் ரயில் இயக்கம்: ஆவடியில் இருந்து பட்டாபிராம் ராணுவ பகுதிக்கு பிற்பகல் 2.20 மணிக்கு பயணிகள் சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது. இது தவிர்த்து சென்னை கடற்கரையில் இருந்து புறப்படவேண்டிய சில மின்சார ரயில்கள், மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்பட்டுச் செல்வதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT