முகப்பு
சென்னை

பல லட்சம் ரூபாய் போதைப் பொருள் பறிமுதல்: கேரள இளைஞர் கைது

சென்னை யானைக்கவுனியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

Updated On : 15 மே, 2018 at 2:47 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

சென்னை யானைக்கவுனியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கேரள இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலையில் உள்ள தனியார் விடுதியில் ஒருவர், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளுடன் தங்கியிருப்பதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதில், அந்த விடுதியில் ஒரு அறையில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள "மெதம்பெட்டமைன்' என்ற போதைப் பொருள் 535 கிராமை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த அறையில் தங்கியிருந்த கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் மொய்தீனை அதிகாரிகள் கைது செய்தனர்.
இதேபோன்று கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்த பார்சலில் இருந்தும் இதே வகை போதைப் பொருள் 300 கிராமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தப் போதைப் பொருள், சவுதி அரேபியாவில் இருந்து கடத்தி வரப்பட்டிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.