சென்னை

சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

DIN


ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கார்த்திகை முதல் நாளில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டு 40 நாள் விரதம் இருந்து சபரிமலைக்கு இருமுடிக் கட்டிச் செல்வது வழக்கம். இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்லவுள்ள நிலையில் அவர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதன்படி சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகமான எஸ்இடிசி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும். தேவைக்கு ஏற்ப அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படும். குழுவாக செல்வோர், போக்குவரத்துக்கழக கிளை மேலாளர்களை அணுகலாம். முன்பதிவுக்கு, ‌w‌w‌w.‌t‌n‌s‌t​c.‌i‌n  என்ற இணையதளத்தையும் பயன்படுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT