முகப்பு
சென்னை

திரிசங்கு நிலையில் திருவொற்றியூர் - சடையன்குப்பம் மேம்பாலம்

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட திருவொற்றியூர்-சடையன்குப்பம் இடையே பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் நில ஆர்ஜிதம், நிதி ஒதுக்கீட்டில்

சென்னை

திரிசங்கு நிலையில் திருவொற்றியூர் - சடையன்குப்பம் மேம்பாலம்

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட திருவொற்றியூர்-சடையன்குப்பம் இடையே பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் நில ஆர்ஜிதம், நிதி ஒதுக்கீட்டில்

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குள்பட்ட திருவொற்றியூர்-சடையன்குப்பம் இடையே பக்கிங்காம் கால்வாயில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் நில ஆர்ஜிதம், நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட காலதாமதத்தால் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தண்ணீரில் தத்தளிக்கும் கிராமம்: திருவொற்றியூருக்கு வடக்கே பக்கிங்காம் மற்றும் புழல் ஏரிக் கால்வாய்களை ஒட்டியுள்ளது சடையங்குப்பம்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தினர் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருள்களை வாங்க திருவொற்றியூர், விம்கோ நகருக்குத்தான் வர வேண்டும். சடையங்குப்பத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் திருவொற்றியூர் இருந்தாலும் 2 கால்வாய்கள் குறுக்கிடுவதால் பொன்னேரி நெடுஞ்சாலை சென்று, மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ஜோதிநகர் வழியாக சுமார் 7 கி.மீ. தூரம் சுற்றி வந்தாக வேண்டும்.

மழைக் காலங்களில் நிலைமை இன்னமும் மோசம். ஊரைச் சுற்றிலும் மழைநீர் சூழ்ந்துவிடும். புழல் ஏரி நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டாலும் இக்கிராமமே தண்ணீரில் தத்தளிப்பது வாடிக்கை. படகுகளில் பொதுமக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது வழக்கம்.
ரூ.16 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம்: நீண்ட காலமாக உள்ள இப்பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு அப்போதைய மீன்வளத்துறை அமைச்சரும், திருவொற்றியூர் எம்.எல்.ஏ.வுமான கே.பி.பி.சாமியின் பரிந்துரையின் பேரில் திருவொற்றியூர் சடையங்குப்பம் இடையே பக்கிங்காம், புழல் ஏரி உபரிநீர் கால்வாய்களை ஒருங்கே கடக்கும் வகையில், கனரக வாகனம் செல்லும் வகையில் சுமார் 350 மீட்டர் நீளத்திற்கு ரூ.16 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2010-இல் இப்பணிகள் தொடங்கின.

ஓராண்டு பணி நடந்த நிலையில் ஒருபகுதியில் பாலம் முழுமையாகக் கட்டிமுடிக்கப்பட்டது. தெற்குப் புறம் இறங்குபாலம் அமைக்கும் இடங்களில் உள்ள சில தனியார் இரும்பாலைகள் தங்களது நிலத்தைக் கையகப்படுத்த நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றனர்.

இதையடுத்து பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் பாலம் கட்டும் பணி நிறைவடைந்துள்ள நிலையில் இதில் நடந்து வந்து பின்னர் தனியார் ஒருவர் அமைத்துக் கொடுத்த படிக்கட்டு வழியாக இறங்கி திருவொற்றியூர் சென்று வருகின்றனர் பொதுமக்கள்.

ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக....: நீதிமன்றத் தடையை நீக்க நெடுஞ்சாலைத் துறையினர் போதிய கவனம் செலுத்தவில்லை. இதனால் வழக்கு இழுத்துக் கொண்டே சென்றது. இதற்கிடையே பாலம் அமைப்பதற்கான நிலத்தைக் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து வழக்குத் தொடுத்த நிறுவனங்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் தங்களது வழக்குகளைத் திரும்பப் பெற ஒப்புக் கொண்டனர். ஆனால் நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆர்ஜிதம் செய்யும்போது நில உரிமையாளர்களுக்கு தற்போதைய மதிப்பு அடிப்படையில்தான் இழப்பீடு வழங்க முடியும். இதனால் திட்ட மதிப்பீடு பல மடங்கு கூடிவிடும் என்பதால் இத்திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்துவதை நெடுஞ்சாலைத் துறை மீண்டும் கைவிடும் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் பணியைத் தொடங்க வேண்டும்: இதுகுறித்து சடையங்குப்பம் கிராம முன்னாள் தலைவர் பரசுராமன் கூறியது: சடையங்குப்பத்தில் பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் 90 சதவீதத்தினர் வசிக்கின்றனர். பாலம் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டவுடன் விடிவுகாலம் பிறந்துவிட்டதாக மகிழ்ந்தோம்.

ஆனாலும் பாலம் பாதியிலேயே நின்று போனது வருத்தமாக உள்ளது. இனியாவது பாலம் கட்டும் பணியை உடனடியாகத் தொடங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பரசுராமன்.

எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி புகார்: திருவொற்றியூர் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.பி. சாமி கூறியது, 2010-இல் தி.மு.க. ஆட்சியிலிருந்தபோது இருளர்கள் உள்ளிட்ட பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியைக் கருத்தில் கொண்டு குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமம் என்ற போதிலும் சிறப்புத் திட்டத்தின் அடிப்படையில் பெரும் முயற்சிக்குப் பிறகு இப்பாலம் அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு ஓராண்டுக்குள் ஆட்சி மாற்றம் வந்தது. இதனையடுத்து அடுத்த வந்த அ.தி.மு.க. ஆட்சியில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. வழக்கு காரணமாக நீதிமன்றத் தடைபெறப்பட்டதாகத் தெரிகிறது.

தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் இப்போதுள்ள ஆட்சியாளர்கள் பாராமுகத்துடன் செயல்படுகின்றனர்
என்றார் சாமி.


 

முழு கட்டுரையைப் படிக்க →