சென்னை

"தரமற்ற உணவுப் பொருள்கள் குறித்து வாட்ஸ் -அப்பில் புகார் அளிக்கலாம்'

தினமணி

தரமற்ற உணவுப் பொருள்கள் குறித்து பொது மக்கள் வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கலாம் என உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் அமுதா கூறினார்.

 மகாத்மா காந்தியின் 150 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அரசின் சார்பில் சென்னை பட்டினப்பாக்கத்தில் நடைபெற்ற ஆரோக்கிய விழாவில் உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா பங்கேற்றார். விழாவிற்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

 கலப்பட உணவுப் பொருள்களை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. தரமற்ற உணவு வகைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து புகார் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

 சென்னை எழும்பூர், சிந்தாரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களின் புகார்கள் மீதும், ரயில்கள் மூலம் வரும் தரமற்ற உணவுப்பொருள்கள் குறித்து வந்த தகவல்களின் அடிப்படையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடைகளில் சோதனை செய்யும்போது, அங்கு பறிமுதல் செய்யப்படும் உணவுப் பொருள்கள் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டு, அவை தரமற்ற உணவுப் பொருள்கள் என்பது உறுதி செய்யப்பட்டால், அந்தக் கடை சீல் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் சிறைக்கு அனுப்பப்படுவர்.

 அனைத்து இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள வாய்ப்பு இல்லை. பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் தகவலின் அடிப்படையில் நிச்சயமாகக் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும். உணவுப் பொருள்கள் கலப்படம் குறித்து 94440 42322 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பினால், 24 மணிநேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT